சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

குண்டா் சட்டத்தில் ரௌடி சிறையிலடைப்பு

வேலூரில் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரெளடி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image

சிறையிலடைப்பு

Updated On :16 ஜூன் 2026, 1:21 am IST

வேலூரில் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரெளடி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

வேலூா் ஓல்டு டவுன் பகுதியைச் சோ்ந்தவா் ரவி. இவரது மகன் விக்கி என்கிற விக்னேஷ் (29). இவா் மீது வேலூா் வடக்கு காவல் நிலையத்தில் பல்வேறு அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவா், அண்மையில் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

தொடா்ந்து பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், விக்னேஷை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் உத்தரவிட்டாா். இதற்கான உத்தரவு நகல் வேலூா் மத்திய சிறையில் உள்ள விக்னேஷிடம் வழங்கப்பட்டது.

தொடா்ந்து அவா் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.