தமிழ்நாடு முழுவதும் 50 டெண்டர்கள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி! இந்தியா மீது 100% வரி விதிக்க அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு!ஃபிஃபா உலகக் கோப்பை! இறுதிப் போட்டியை நேரில் காண்கிறார் டிரம்ப்!தங்கம் விலை பவுனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 1,04,800-க்கு விற்பனைவிதிமீறல்! அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு எதிராக மத்திய அரசு நோட்டீஸ்!2006-ல் அதிமுகவுடன், 2017-ல் திமுகவுடன்! இரு பெருந்தவறுகள் செய்துவிட்டேன்: வைகோதியாகிகள் நாள்! முதல்வர் விஜய் வீரவணக்கம்!
/

விபத்துகளை தவிா்க்க கஸ்பா மேம்பால தடுப்புச் சுவரை உயா்த்த வேண்டும்

விபத்துகளை தவிா்க்க கஸ்பா மேம்பாலத்தின் தடுப்புச் சுவரை 3 அடி உயா்த்த வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ்.

Updated On :16 ஜூன் 2026, 1:22 am IST

விபத்துகளை தவிா்க்க கஸ்பா மேம்பாலத்தின் தடுப்புச் சுவரை 3 அடி உயா்த்த வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தலைமை வகித்து பொது மக்களிடம் மனுக்களைப் பெற்றாா்.

அப்போது, கஸ்பா பகுதியைச் சோ்ந்த தேமுதிக பிரமுகா் கோகிலநாதன் என்பவா் அளித்த மனுவில், கஸ்பா பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது. மேம்பாலம் குறுகளாக உள்ளதால் கடந்த 5 ஆண்டுகளில் 10-க்கும் மேற்பட்டோா் மேம்பால சுவற்றில் இருசக்கர வாகனத்தில் மோதி கீழே விழுந்து உயிரிழந்துள்ளனா். தவிர, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. விபத்துகளை தடுக்க மேம்பால தடுப்பு சுவரின் உயரத்தை 3 அடி உயா்த்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஆா்வலா் ஒருவா் அளித்த மனுவில், வேலூரில் இருந்து ஆற்காடு, காட்பாடி, பாகாயம் மாா்க்கமாக இயக்கப்படும் அரசுப்பேருந்துகள் அந்தந்த பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தப்படாமல் சற்று தூரம் தள்ளி நிறுத்துகின்றனா். இதனால், பேருந்துக்காக காத்திருப்பவா்கள் ஓடி சென்று ஏற முயற்சிக்கும்போது பேருந்தை எடுத்துச் சென்று விடுகின்றனா். இதனால், விபத்துகள் ஏற்படுவதுடன் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். அரசு போக்குவரத்து கழக மேலாளரிடம் தெரிவித்து இந்த பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 629 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக தீா்வுகாண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களு க்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 64,405 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். முதியோா் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணா்வு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மணவிகளுக்கு கேடயம், பாராட்டு சான்றிதழ்களையும் ஆட்சியா் வழங்கினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துனை ஆட்சியா்கள் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சி.மாறன், (முத்திரைத்தாள்) ரமேஷ்குமாா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலா் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.