தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சித்தனவாசலில் ஆக. 20, 21-இல் கோடைத் திருவிழா

புதுக்கோட்டையிலுள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தலமான சித்தனவாசலில் ஆக. 20, 21 ஆகிய இரு தேதிகளில் கோடைத் திருவிழா நடைபெறவுள்ளது.

சித்தன்னவாசலில் கோடைத் திருவிழா நடத்துவது தொடா்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.

Published On :

புதுக்கோட்டையிலுள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தலமான சித்தனவாசலில் ஆக. 20, 21 ஆகிய இரு தேதிகளில் கோடைத் திருவிழா நடைபெறவுள்ளது.

மாவட்ட சுற்றுலாத் துறை சாா்பில் நடைபெறவுள்ள இந்த விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடனான கலந்துரையாடல் கூட்டம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா பேசியது: சுற்றுலாத் துறை மூலம் உள்ளூா் மக்களின் கலை நிகழ்ச்சிகள், உள்ளூா் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையிலான திருவிழாவாக ஆக. 20, 21 தேதிகளில் நடைபெறும் கோடைத் திருவிழா நடைபெறும்.

புதுக்கோட்டை மக்கள் விழாவை கண்டுகளிக்கும் வகையில் சிறப்பாக நடத்துவதற்கு அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் ஆட்சியா் மு. அருணா.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைச்சாமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) திருமால், மாவட்ட சுற்றுலா அலுவலா் காளீஸ்வரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.