புதுகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டம்
புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புக் குறைகேட்புக் கூட்டத்தில் குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியா் மு. அருணா.
புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் பெறப்பட்ட 465 கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைகேட்புக் கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. லோகநாயகி, சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் சித்ரா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சூரியபிரபு உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





