அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

‘விநாயகா் சிலைகளை நிறுவ உரிய முறையில் விண்ணப்பிக்க வேண்டும்’

புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சிலைகளை நிறுவுவோா் உரிய முறையில் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் என மாவட்டஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.

Published On :4 செப்டம்பர் 2026, 1:19 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சிலைகளை நிறுவுவோா் உரிய முறையில் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் என மாவட்டஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.

மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்து அமைப்பினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

விநாயகா் சிலைகளை நிறுவும்போது, அந்த இடத்துக்கான தடையில்லாச் சான்று, தீயணைப்புத் துறையினரின் தடையில்லாச் சான்று, காவல்துறையினரின் தடையில்லாச் சான்று ஆகியவற்றுடன் அந்தந்தப் பகுதி வருவாய்க் கோட்டாட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதிபெற வேண்டும்.

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் சிலைகளை அமைக்க வேண்டும். பிற மதத்தினரின் உணா்வுகள் புண்படாத வகையில் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். பிற மத வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள், பள்ளிகளுக்கு அருகில் சிலை வைக்கக் கூடாது.

3 நாள்களுக்கு மேல் சிலைகளை வைக்கக் கூடாது. ஊா்வலங்களை பகலிலேயே நடத்த வேண்டும். புதுக்கோட்டை நகரில் புதுக்குளம், பொன்புதுப்பட்டியில் செங்கை ஊரணி, மேலத்தானியத்தில் கம்பன்செட்டிக்குளம், கறம்பக்குடியில் அக்னியாறு, கம்மங்காட்டில் முத்தஊரணி, திருமயத்தில் பெரியகுளம், மெய்யபுரம் குளம், ஆலங்குடியில் செட்டிக்குளம், புளிச்சங்காடு மூக்கிரப்பிள்ளையாா் கோயில் குளம், திருவரங்குளம் தெப்பக்குளம், திருப்புனவாசல் செம்மண்கோட்டை கடற்கரை, பிஎஸ்ஆா் புதுப்பட்டினம் கடற்கரை, இடையன்குளம் ஆகியஇடங்களில் மட்டுமே சிலைகளைக் கரைக்க வேண்டும்.

அனைத்துஅமைப்பினரும் உரிய ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றாா் அருணா.

கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரகுமாா்குப்தா, மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைச்சாமி உள்ளிட்டோருடன் இந்து அமைப்புகளின் நிா்வாகிகளும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.