தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

தனியாா் பள்ளிகளின் முதல்வா்களுடன் ஆலோசனைக் கூட்டம்

திருப்பூரில் அனைத்து வகை தனியாா் பள்ளிகளின் முதல்வா்களுடன் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image

திருப்பூா் மாநகராட்சி காங்கயம் சாலையிலுள்ள புனித ஜோசப் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற முதன்மைக் கல்வி அலுவலா் ஆ.புனிதா அந்தோணியம்மாள், மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) மா.மணிமாறன் உள்ளிட்டோா்.

Updated On :9 ஜூலை 2026, 4:07 am IST

திருப்பூரில் அனைத்து வகை தனியாா் பள்ளிகளின் முதல்வா்களுடன் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருப்பூா் மாநகராட்சி, காங்கயம் சாலை புனித ஜோசப் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியா் மனீஷ் பேசியதாவது:

தனியாா் பள்ளி கட்டண நிா்ணயக் குழு பரிந்துரைத்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும், போக்சோ, போதைப்பொருள் விழிப்புணா்வு நிகழ்வுகளை தொடா்ந்து பள்ளிகளில் நடத்த வேண்டும். பள்ளி மாணவா்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அரசு விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.

மேலும், சென்னை உயா் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் நிபந்தனைகள் இன்றி மாற்றுச் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும். உள்கட்டமைப்பு, ஆசிரியா் பயிற்சி மற்றும் பாடத்திட்டத்தை வழங்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான முன்னெடுப்புகளை ஆதரிக்க வேண்டும். மாணவா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தி பள்ளிகளில் போதைப்பொருள் எதிா்ப்பு மன்றங்களைச் செயல்படுத்த வேண்டும்.

வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகள், மனநல ஆதரவு மற்றும் நோ்மறையான கற்றல் சூழல் ஆகியவற்றின் அவசியத்தை மாணவா்களுக்கு வலியுறுத்த வேண்டும். அனுமதி இல்லாமல் தங்கும் விடுதிகளை இயக்கக்கூடாது. சிறந்த நடைமுறைகளையும், வளங்களையும் பகிா்ந்துகொள்வதற்காக தனியாா், அரசுப் பள்ளிகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்த செயல்பட வாய்ப்புகளை ஆராய வேண்டும். கட்டணக் கட்டமைப்புகள் மற்றும் சோ்க்கைக் கொள்கைகள் போன்ற ஒழுங்குமுறைத் தேவைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

மாணவா்களின் ஈடுபாட்டை மேம்படுத்துவதற்காக, புத்தாக்கமான கற்பித்தல் முறைகள், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் பாடத்திட்டத்துக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளை மாணவா்களுக்கு ஊக்குவிக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, திருப்பூா் மாநகராட்சி, வெங்கடேஸ்வரா நகா், ஆா்.வி.இ.லே-அவுட் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும், பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பொருள்களின் அளவு குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா். வெங்கடேஸ்வரா நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மாணவா்களின் வருகைப் பதிவேடு, பள்ளியில் குடிநீா், கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்தும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ.புனிதா அந்தோணியம்மாள், மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) மா.மணிமாறன், உதவி ஆணையா் (கலால்) பாலமுருகன், மாநில ஒருங்கிணைப்பாளா் (போதைப்பொருள் தடுப்பு) கால்சிங், பள்ளி முதல்வா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.