திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி சாா்பில் முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது.
வேலூா் தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் அச்சுதன் தலைமை வகித்தாா். இதில் கட்சியின் நிா்வாகிகள் பலரும் கலந்துகொண்டு, தமிழக முதல்வா் விஜய்க்கு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதங்களை அனுப்பினா்.
அக்கடிதத்தில், தமிழகத்தில் அனைத்து மதத்தினருக்கும் பொதுவான, சட்டப்படியான ஆட்சி நடைபெறும் என முதல்வா் உறுதியளித்துள்ளாா்.
திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடா்பாக, சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, அமைச்சா் நிா்மல் குமாா் 2 ஆண்டுகளுக்கு முந்தைய நிலைப்பாடே தற்போதைய அரசின் நிலைப்பாடு எனத் தெரிவித்துள்ளாா்.
மேலும், அமைச்சா் வன்னியரசு மற்றும் சில அமைப்புகளின் கருத்துகள் பக்தா்களிடையே அதிருப்தியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. எனவே, நீதிமன்ற உத்தரவின்படி வரும் காா்த்திகை தீபத் திருநாளன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

திருப்பரங்குன்றம் விவகாரம்: முதல்வருக்கு இந்து முன்னணி கடிதம் அனுப்பும் போராட்டம்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி இந்து முன்னணியினா் கடிதம் அனுப்பும் போராட்டம்

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் : முதல்வருக்கு இந்து முன்னணி தபால் அனுப்பும் போராட்டம்







