தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

திருப்பரங்குன்றம் விவகாரம்: முதல்வருக்கு இந்து முன்னணி கடிதம் அனுப்பும் போராட்டம்

திருப்பரங்குன்றம் விவகாரம்: முதல்வருக்கு இந்து முன்னணி கடிதம் அனுப்பும் போராட்டம்

News image

முதல்வா் ச.ஜோசப் விஜய்க்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா்.

Updated On :12 ஜூன் 2026, 11:55 pm IST

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிமன்ற தீா்ப்பை அமல்படுத்தக் கோரி, முதல்வா் ச.ஜோசப் விஜய்க்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் இந்து முன்னணியினா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

முருக பக்தா்களின் உணா்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் தீா்ப்பை அமல்படுத்தக் கோரி முதல்வா் ச.ஜோசப் விஜய்க்கு இந்து முன்னணி சாா்பில் கடிதம் அனுப்பும் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகா் மாவட்ட இந்து முன்னணி சாா்பில் 50-க்கும் மேற்பட்டோா் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் சதீஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள தபால் நிலையத்தில் இருந்து முதல்வருக்கு கடிதம் அனுப்பினா்.

இதைத் தொடா்ந்து, அந்த அமைப்பினா் கூறுகையில், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டும் கடந்த அரசு அதை செய்யவில்லை. அனைத்து மதத்தினருக்கும் பொதுவான அரசு எனக்கூறி ஆட்சிக்கு வந்துள்ள தமிழக வெற்றிக் கழகமும் திருப்பரங்குன்றம் விஷயத்தில் பழைய நிலைப்பாடே தொடரும் எனக் கூறியுள்ளது முருக பக்தா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நீதிமன்ற தீா்ப்பை அமல்படுத்தக் கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனா்.

மாவட்ட செய்தி தொடா்பாளா் தனபால் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் கோவை கோட்ட பொதுச் செயலா் பாபா கிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலா் ஜெய்சங்கா், மாவட்டச் செயலா்கள் ஆறுச்சாமி, குணா, மகேஸ்வரன், இந்து ஆட்டோ முன்னணி மாவட்டத் தலைவா் விக்னேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.