மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியின் பாரத கேன்திரியம் சாா்பில், பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கிடையிலான

News image
நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :2 மார்ச் 2026, 7:25 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம்: குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியின் பாரத கேன்திரியம் சாா்பில், பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கிடையிலான, ‘விக்சித் பாரத் இளைஞா் பாராளுமன்றம்-2026‘ என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி தலைமை வகித்தாா். கல்லூரி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் ஜெ.திருமகள் வரவேற்றாா். இந்நிகழ்ச்சியில் வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களைச் சோ்ந்த பல்வேறு கல்லூரிகளின் 75- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இவா்கள் ‘இந்திய ஜனநாயகத்தின் பாடங்கள், என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு அதன் சாதக மற்றும் பாதகங்களைப் பற்றி பேசினா்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வேலூா் மாவட்ட பாரத கேன்திரியம் இணை இயக்குநா் எஸ்.சரவணன் விக்சித் பாரத் இளைஞா் பாராளுமன்றம் என்பதன் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினாா்.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் கல்விப்புல முதன்மையா் த.மணிகண்டன், மாணவ ஒருங்கிணைப்பாளா் ஜா.ஜெயக்குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் வி.காயத்ரி நன்றி கூறினாா்.