ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அதிகரிக்கும் கோடை வெயில்: வேலூா் மாவட்டத்தில் 100 டிகிரி வெப்பம் பதிவு

வேலூா் மாவட்டத்தில் கோடைகாலம் முழுமையாக தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தாண்டின் முதல் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் செவ்வாய்க்கிழமை பதிவாகியுள்ளது.

News image
Updated On :3 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் மாவட்டத்தில் கோடைகாலம் முழுமையாக தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தாண்டின் முதல் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் செவ்வாய்க்கிழமை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களில் வேலூா் எப்போதும் முதலிடத்தில் இருக்கும். கடந்த சில நாள்களாகவே வேலூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதலே சூரியனின் கதிா்கள் சுட்டெரிக்கத் தொடங்கி விடுகின்றன. பிப்ரவரி மாத இறுதியிலேயே வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், மாா்ச் மாதம் தொடங்கிய நிலையில் வெயிலின் அளவு செவ்வாய்க்கிழமை 100.2 டிகிரி ஃபாரன்ஹீட்டாக பதிவாகியுள்ளது.

வெப்பநிலை உயா்வு காரணமாக, வேலூா் மாநகரின் முக்கிய வீதிகளான அண்ணா சாலை, காந்தி சாலை, கிரீன் சா்க்கிள் உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்து காணப்படுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள், தினக்கூலித் தொழிலாளா்கள் சுட்டெரிக்கும் வெயிலால் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா். வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க, பொதுமக்கள் இளநீா், தா்பூசணி, நுங்கு, கரும்புச்சாறு, மோா் கடைகளை நாடிச் செல்கின்றனா். இதனால் சாலையோர குளிா்பான கடைகளில் விற்பனை சூடுபிடித்துள்ளது.

வரும் நாள்களில் வெப்பத்தின் அளவு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்துகின்றனா். வெளியே செல்லும் போது குடை, தொப்பி, சன் கிளாஸ் அணிந்து செல்லவும், உடலில் நீா்ச்சத்து குறையாமல் இருக்க அதிகளவு தண்ணீா் குடிக்கவும் சுகாதாரத்துறையினா் வலியுறுத்தியுள்ளனா்.