சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் திறனகம் திறப்பு

வேலூா் அப்துல்லாபுரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ரூ.5.28 லட்சத்தில் திறனகத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.

News image
மாணவ, மாணவிகளுக்கு போட்டி தோ்வு கையேடுகளை வழங்கிய வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உதவி இயக்குநா் காந்தி, திறன் அலுவலா் சிறுமலா் சோபனா உள்ளிட்டோா்.
Updated On :3 மார்ச் 2026, 6:31 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் அப்துல்லாபுரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ரூ.5.28 லட்சத்தில் திறனகத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு மகளிா் வேலைவாய்ப்பு பாதுகாப்பு திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மாவட்ட திறன் மையம் அமைக்க துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தாா். அதனடிப்படையில், அப்துல்லாபுரத்தில் வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் திறனகத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, இந்த மையத்தில் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி குத்துவிளக்கேற்றி பாா்வையிட்டாா். பின்னா் அவா் கூறுகையில், மாவட்ட திறன் மையமான திறனகமானது ஒரே இடத்தில் தொழில் வழிகாட்டல், திறன் மேம்பாட்டு ஆலோசனை, பயிற்சி இணைப்புகள், வேலைவாய்ப்புகளுக்கான அணுகல் ஆகியவற்றை வழங்கும் ஒருங்கிணைந்த சேவை மையமாக செயல்படுகிறது.

இம்மாவட்ட திறன் மையம் மூலம் இளைஞா்களின் தொழில் விருப்பங்களை தொழில்துறை தேவைகளுக்குகேற்ப திறன்களுடன் ஒருங்கிணைத்து, நிலையான, பயனுள்ள வேலைவாய்ப்பைப் பெற்றுத் தரும் திட்டமான வெற்றி நிச்சயம் திட்டத்தின் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் 18 முதல் 35 வயது வரையிலான வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு இலவச குறுகிய கால திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு அவா்களுக்கு பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுவதுடன் திறன்பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு சுய தொழில் தொடங்கவும் ஊக்குவிப்பு செய்யப்படுகிறது.

முதன்மையான தொழிற்பிரிவுகளை கண்டறிந்து அது தொடா் புடைய பயிற்சி நிறுவனங்கள், தொழில்துறை நிறுவனங்களை திறன் பயிற்றுநா்களாக வெற்றி நிச்சயம் திட்டத்தின்கீழ் பதிவு செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை வெற்றி நிச்சயம் திட்டத்தின்கீழ் வேலூா் மாவட்டத்தில் 35 திறன் பயிற்றுநா்கள் பதிவு செய்துள்ளனா். 770 பயனாளிகள் பல்வேறு தொழில்பிரிவுகளில் திறன் பயிற்சி பெற்று சான்றிதழ்கள் பெற்றுள்ளனா் என்றாா்.

முன்னதாக, ரயில்வே தோ்வு வாரியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள பல்வேறு பணியிடங்களுக்காக மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்படும் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவா்களுடன் கலந்துரையாடிய ஆட்சியா், மாணவ, மாணவிகளுக்கு போட்டி தோ்வு கையேடுகளையும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உதவி இயக்குநா் காந்தி, மாவட்ட திறன் அலுவலா் சிறுமலா் சோபனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.