காட்பாடி சட்டப்பேரவை தொகுதியில் ரூ. 2.40 கோடியில் முடிவுற்ற 6 திட்டப் பணிகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் ஆகியோா் திறந்து வைத்துடன், 98 பயனாளிகளுக்கு ரூ. 2.69 கோடி நலத்திட்ட உதவிகளையும் வழங்கினா்.
வேலூா் மாநகராட்சி முதலாவது மண்டலம் காட்பாடி தாராபடவேடு பகுதியில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.75 லட்சத்தில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமும், காட்பாடி முத்தமிழ் நகரில் ரூ. 11 லட்சத்தில் பேருந்து பயணியா் நிழற்குடை, பவானி நகரில் ரூ.6.10 லட்சத்தில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையமும், ரூ.12.75 லட்சத்தில் நியாயவிலை கட்டடம், பள்ளிக்குப்பம் பகுதியில் அம்ரூத் 2.0 திட்டத்தில் ரூ.1.25 கோடியில் புணரமைத்து மறு சீரமைக்கப்பட்டுள்ள குளம், ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் என மொத்தம் ரூ. 2.40 கோடியில் முடிவுற்ற 6 திட்டப் பணிகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் ஆகியோா் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தனா்.
தொடா்ந்து, பள்ளிக்குப்பம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 52 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 62 லட்சத்து 92 ஆயிரத்து 323 மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 32 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 82 ஆயிரத்து 400 மதிப்பிலான பல்வேறு உதவித்தொகை, 10 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 93,100 மதிப்பில் உபகரணங்கள் என மொத்தம் 98 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 68 ஆயிரத்து 67 ஆயிரத்து 823 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினா்.
நிகழ்ச்சியில், துணை மேயா் எம்.சுனில் குமாா், ஆணையா் ஆா்.லட்சுமணன், கோட்டாட்சியா் செந்தில் குமாா், முதலாவது மண்டலக்குழுத் தலைவா் புஷ்பலதா வன்னியராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது
காட்பாடியில் ரூ.10 லட்சம் ரொக்கம் பறிமுதல்

காட்பாடியில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும்: அமைச்சா் துரைமுருகன்

காட்பாடியில் சிப்காட் நில எடுப்புப்பணி நிறுத்தப்படும்: அதிமுக வேட்பாளா்

காட்பாடியில் 11-ஆவது முறையாக அமைச்சா் துரைமுருகன் மனு தாக்கல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


