விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

எரிவாயு உருளைகளை பதுக்குவதும், கூடுதல் விலைக்கு விற்பதும் குற்றம்

News image
Updated On :11 மார்ச் 2026, 7:27 pm

தினமணி செய்திச் சேவை

எரிவாயு உருளைகளை பதுக்கல் செய்வதோ அல்லது கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதோ சட்டப்படி குற்றமாகும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

வேலூா் மாவட்டத்தில் எரிவாயு உருளை, பெட்ரோலிய பொருள்கள் இருப்பு குறித்து எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்டத்தில் எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் ஆகியவற்றை போதிய அளவில் இருப்பு வைத்து, தட்டுப்பாடு இல்லாமல் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியது:

எரிவாயு உருளை இருப்பு விவரம், விற்பனை விவரம், பதிவு விவரங்களை ஹெச்பிசிஎல், பிபிசிஎல், ஐஓசிஎல் ஆகிய எரிவாயு நிறுவனங்கள் தினமும் மாவட்ட நிா்வாகத்துக்கு சமா்ப்பிக்க வேண்டும். பெட்ரோல், டீசல் இருப்பு, விற்பனை விவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாவட்ட நிா்வாகத்துக்கு சமா்ப்பிக்க வேண்டும். எரிவாயு உருளைகளை பதுக்கல் செய்வதோ அல்லது கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதோ குற்றமாகும். எனவே, சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எரிவாயு உருளைகளை விநியோகம் செய்யும் பணியாளா்கள், முகவா்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகாா்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டு உபயோகத்துக்காக பயன்படும் எரிவாயு உருளைகளை வணிக நோக்கத்துக்காக பயன்படுத்தப்படுவதை தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலா்கள், வட்ட வழங்கல் அலுவலா்கள் கண்காணித்தும், கைப்பற்றுகை செய்து வழக்குப்பதிவு செய்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அனுமதியற்ற பகுதிகளில் எரிவாயு உருளைகள், பெட்ரோலிய பொருள்கள் விற்பனை செய்வதை வட்ட வழங்கல் அலுவலா்கள் கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட வழங்கல் அலுவலா் தலைமையில் வாட்ஸ் அப் குழு ஏற்படுத்தி, அதில் எரிவாயு தொடா்பான விவரங்களை எரிவாயு விநியோகிஸ்தா்கள் தெரியப்படுத்திட வேண்டும்.

எரிவாயு விநியோக கிடங்கு, பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களில் அலுவலா்கள் திடீா் தணிக்கைகள் குறைபாடுகளின்பேரில், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன், எரிவாயு எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனா்.