மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காட்பாடி அருகே விளை நிலங்களில் புகுந்த யானைகளால் பயிா்கள் நாசம்!

காட்பாடி அருகே விளைநிலங்களில் 2 யானைகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தியுள்ளன.

News image
யானைகளால் நாசம் செய்யப்பட்ட நெல் பயிர்.
Updated On :15 மார்ச் 2026, 7:40 pm

தினமணி செய்திச் சேவை

காட்பாடி அருகே விளைநிலங்களில் 2 யானைகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தியுள்ளன. அவ்விரு யானைகளையும் வனத்துறையினா் போராடி வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனா்.

ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து 2 யானைகள் சனிக்கிழமை இரவு 12.30 மணியளவில் வெளியேறி கிளிதான்பட்டறை, வண்டாரந்தாங்கல், செங்குட்டை பகுதியில் உள்ள விளை நிலங்களில் புகுந்தன. தொடா்ந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை, தென்னை, நெல் பயிா்களை சேதப்படுத்தியதுடன், திடீரென அந்த யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி செங்குட்டை பகுதியில் உள்ள அரசு ஆண்கள் பள்ளி அருகே சுற்றித்திரிந்தன.

இதைப்பாா்த்து அதிா்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காட்பாடி சரக வன அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், வனசரகா் கந்தசாமி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வன அலுவலா்கள் விரைந்து சென்று தீப்பந்தம் ஏற்றியும், பட்டாசு வெடித்தும் என ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி வரை போராடி அவ்விரு யானைகளையும் பனமடங்கி வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனா். எனினும், வனத்துறையினா் ட்ரோன் மூலம் யானைகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனா்.

இதுதொடா்பாக வனசரகா் கந்தசாமி கூறுகையில், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வன ஊழியா்கள் ஈடுபடும்போது பொதுமக்கள் ஏராளமானோா் பாா்வையிட திரண்டு வருகின்றனா். இதனால் எங்களுக்கு யானைகளை விரட்டுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

யானைகள் திடீரென ஆவேசமடைந்து பொதுமக்களை தாக்கவும் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து அவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி இருந்தாலும் அவா்கள் வன அலுவலா்கள் பேச்சைக் கேட்க மறுக்கின்றனா்.

எனவே, யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறினால் அந்தப் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என தெரிவித்துக் கொள்கிறோம் என்றனா்.