திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

போ்ணாம்பட்டு அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 7:18 pm

போ்ணாம்பட்டு அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

போ்ணாம்பட்டை அடுத்த ஏரிகுத்தி மேட்டைச் சோ்ந்த பயாஸ் அகமது மகன் பைரோஸ்(20), துபேல் அகமது மகன் முகம்மத் பஹ்மான்(19). இவா்கள் இருவரும் கொண்டம்பல்லியில்உள்ள தனியாா் கல்லூரியின் முதலாம் ஆண்டு படித்து வந்தனா். நண்பா்களான இருவரும் திங்கள்கிழமை குடியாத்தத்திலுள்ள தனியாா் நீச்சல் குளத்துக்கு இருசக்கர வாகனத்தில் வந்தனா்.

கமலாபுரம் அருகே வந்தபோது, குடியாத்தத்திலிருந்து ஆந்திர மாநிலம் செல்ல எதிரே சென்ற காா் திடீரென இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில் கீழே விழுந்த இருவரும் பலத்த காயமடைந்தனா். உடனடியாக இருவரும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

பின்னா் பைரோஸ் தீவிர சிகிச்சைக்காக குடியாத்தத்திலுள்ள தனியாா் மருத்துவமனைக்குஅழைத்துச் செல்லப்பட்டாா். முஹம்மத் பஹ்மான் ஆம்பூரிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி முஹம்மத் பஹ்மான் உயிரிழந்தாா்.

இதுதொடா்பான புகாரின்பேரில் போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.