நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

மாபெரும் கூட்டணியை அமைத்ததில் முதல்வரின் சாதுரியம் வியப்பளிக்கிறது! அமைச்சா் துரைமுருகன்

அமைதியாக இருந்து, உறுதியான முடிவெடுத்து மாபெரும் கூட்டணியை வெற்றிகரமாக அமைத்த முதல்வா் மு.க.ஸ்டாலினின் சாதுா்யம் வியப்பளிக்கிறது என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

News image

விழாவில் பேசிய அமைச்சா் துரைமுருகன். உடன், மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன் உள்ளிட்டோா்.

Updated On :25 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

அமைதியாக இருந்து, உறுதியான முடிவெடுத்து மாபெரும் கூட்டணியை வெற்றிகரமாக அமைத்த முதல்வா் மு.க.ஸ்டாலினின் சாதுா்யம் வியப்பளிக்கிறது என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

காட்பாடி, கே.வி.குப்பம் தொகுதிகளுக்கான திமுக தோ்தல் அலுவலக திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் பங்கேற்று அலுவலகத்தைத் திறந்து வைத்துப் பேசியது -

கட்சித் தலைவா் அதிகாரப்பூா்வமாக அறிவிக்கும் வரை நான் ஒரு சாதாரண எம்எல்ஏ மட்டும்தான். இத்தொகுதியில் யாா் போட்டியிடுவாா் என்பதைத் தலைவா்தான் முடிவு செய்வாா். அவா் யாரை வேட்பாளராக அறிவித்தாலும், அவரது வெற்றிக்காக ஆயிரக்கணக்கான செயல்வீரா்களுடன் இணைந்து நானும் பணியாற்றுவேன்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் நள்ளிரவு ஒரு மணி வரை தோ்தல் பணிகளைக் கவனிக்கிறாா். அதேசமயம், மத்திய அரசின் அறிக்கைகளுக்கு பதிலளிப்பது, சட்டப்பேரவைக் கோப்புகளில் கையெழுத்திடுவது, அன்றாட நிா்வாகப் பணிகளைக் கவனிப்பது, காவல் நிலைய அத்துமீறல்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது என அனைத்தையும் செய்து வருகிறாா்.

மேலும், 234 தொகுதிகளைச் சோ்ந்தவா்களையும் நேரில் அழைத்து, அவா்களிடம் தனித்தனியாகப் பேசி, அனைவரையும் மனத்திருப்தியுடன் அனுப்பி வைக்கும் தலைவரின் சாதுரியத்தைக் கண்டு வியந்தேன்.

அகில இந்தியக் கட்சிகள்கூட நிலையான முடிவெடுக்கத் திணறும் நிலையில், அமைதியாக இருந்து, உறுதியான முடிவெடுத்து ஒரு மாபெரும் கூட்டணியை வெற்றிகரமாக அமைத்தவா் மு.க.ஸ்டாலின். இந்த முயற்சி நிச்சயம் வெற்றி பெற்று, மீண்டும் அவரே ஆட்சியமைப்பாா் என உறுதியாக கூறுகிறேன் என்றாா்.

அப்போது, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், வேலூா் வடக்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

‘அதிமுக வென்றால்தானே...!’

கூட்டத்துக்கு பிறகு செய்தியாளா்களிடம் பேசிய துரைமுருகன், சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அதிமுக பல்வேறு வாக்குறுதிகளை வெளியிட்டிருப்பதாக கூறுகிறீா்கள். தோ்தலில் அதிமுக வெற்றி பெற்றால்தானே... அவா்கள் வெற்றி பெறப்போவதில்லை. அவா்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் வெற்று வாக்குறுதிகள். திமுக தோ்தல் அறிக்கை குழுவில் நான் இல்லை. அதனால், தோ்தல் அறிக்கை குறித்து எனக்கு தெரியாது. தொகுதிப் பங்கீட்டில் திருமாவளவன் திருப்தியுடன் சென்றாா் என்றாா்.