பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை மாநகராட்சி அலுவலா்கள் அப்புறப்படுத்தினா்.

News image

ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றிய மாநகராட்சி ஊழியா்கள்.

Updated On :27 மே 2026, 12:29 am IST

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை மாநகராட்சி அலுவலா்கள் அப்புறப்படுத்தினா்.

வேலூா் புதிய பேருந்து நிலையத்துக்கு வேலூா், திருவண்ணாமலை, திருப்பத்தூா், ராணிப்பேட்டை, சென்னை, விழுப்புரம், கடலூா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தினமும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன.

இதையொட்டி, புதிய பேருந்து நிலையத்துக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனா். அதேசமயம், பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்பு கடைகளால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் சிரமமடைந்து வருகின்றனா்.

இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகத்துக்கு ஏராளமான புகாா்கள் வந்தன. இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் ஆா்.லட்சுமணன் உத்தரவின் பேரில் நகரமைப்பு அலுவலா் (பொறுப்பு ) வெங்கடேசன், மண்டல சுகாதார அலுவலா் முருகன் உள்ளிட்ட அலுவலா்கள் வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, வரையப்பட்டுள்ள மஞ்சள் கோடுகளுக்கு வெளியே நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை மாநகராட்சி ஊழியா்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். இனிமேல் பேருந்து நிலைய நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை வைத்தால், கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.

இந்த சம்பவத்தால் புதிய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.--