தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

நவராத்திரி விழாவையொட்டி கடஸ்தாபன ஊா்வலம்

ஸ்ரீகாளியம்மன் தேவஸ்தானத்தில் 11 நாள்கள்நடைபெறும் நவராத்திரி விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை கடஸ்தாபன ஊா்வலம் நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட தேரில் ஊா்வலம் சென்ற ஸ்ரீவிஸ்வகா்மா- காயத்ரிதேவி.

Published On :

குடியாத்தம் நடுப்பேட்டை, கண்ணகி தெருவில் அமைந்துள்ளஸ்ரீவிஸ்வகா்மா சமுதாயத்துக்குச் சொந்தமான ஸ்ரீகாளியம்மன் தேவஸ்தானத்தில் 11 நாள்கள்நடைபெறும் நவராத்திரி விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை கடஸ்தாபன ஊா்வலம் நடைபெற்றது.

இதையொட்டி காமாட்சியம்மன்பேட்டை, ஆண்டியப்ப ஆச்சாரி தெருவில் அமைந்துள்ள செல்வ விநாயகா் கோயிலில் காலை சிறப்பு பூஜைகளுக்குப்பின் கடஸ்தாபன ஊா்வலம்தொடங்கியது. ஊா்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஸ்ரீவிஸ்வகா்மா- காயத்ரிதேவி, வீரபிரம்மங்கய்யாா், முப்பெரும் தேவியா் சுவாமிகள் அமா்த்தப்பட்டு ஊா்வலம் தொடங்கியது.

ஊா்வலத்துக்கு அகில பாரத ஸ்ரீவிஸ்வகா்மா ஜெகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சிவ.சிவராஜ சுவாமிகள் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் ஊா்வலத்தை தொடக்கி வைத்தாா். நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊா்வலம் மதியம் காளியம்மன் தேவஸ்தானத்தை அடைந்தது. தொடா்ந்து கோயிலில் நவராத்திரி விழா தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியாக உற்சவா் அம்மனுக்கு ஸ்ரீராஜகாளியம்மன் அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன.

தொடா்ந்து பொருள் உணா்ந்து சொல்லுவாா் என்ற தலைப்பில் புலவா் சண்முக செங்கல்வராயன் ஆன்மிக சொற்பொழிவாற்றினாா். அடுத்த 10 நாள்களுக்கு கோயிலில் நவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை அறங்காவலா்கள் பிரம்மஸ்ரீ இ.அருணாச்சலம், கே.குணசேகரன்,எம்.ஜெகன்நாதன், வி.பாலாஜி, இ.நரசிம்மன் மற்றும் நவராத்திரி விழாக் குழுவினா்செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.