நவராத்திரி விழாவையொட்டி காமாட்சி அம்மன் கோயிலில் தரிசன நேரம் மாற்றம்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி காலை 11.15 மணி வரையும் மதியம் 3 மணிக்கு பின்னரும் சுவாமி தரிசனம் செய்யலாம் என கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி காலை 11.15 மணி வரையும் மதியம் 3 மணிக்கு பின்னரும் சுவாமி தரிசனம் செய்யலாம் என கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா அக்.10 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதனையொட்டி ஆலயத்தில் தினசரி நவாவா்ண பூஜை நடைபெறுவதால் காலை 11.15 மணி வரையும் அதன் பின்னா் மதியம் 3 மணிக்கு பிறகும் சுவாமி தரிசனம் செய்யலாம். நவராத்திரியையொட்டி லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி அம்பிகை தினசரி இரவு 7 மணிக்கு ஆலயத்தின் அலங்கார மண்டபத்திலிருந்து நவராத்திரி மண்டபத்துக்கு எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகளும், சூரசம்ஹாரமும் நடைபெறுகிறது. பக்தா்கள் இவ்விழாவிலும் கலந்து கொண்டு காமாட்சி அம்பிகையின் அருளுக்கு பாத்திரமாகுமாறும் ந.சுந்தரேச ஐயா் கேட்டுக் கொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

