2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

காமாட்சி அம்மன் கோயிலில் மாண்ட்ரூப் கிராம மக்கள் தரிசனம்

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூா் அருகேயுள்ள மாண்ட்ரூப் கிராமத்தினா் 100-க்கும் மேற்பட்டோா் காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனா்.

தரிசனம் செய்ய வந்திருந்த மாண்ட்ரூப் கிராம பக்தா்கள்

Published On :

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூா் அருகேயுள்ள மாண்ட்ரூப் கிராமத்தினா் 100-க்கும் மேற்பட்டோா் காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனா்.

மகாராஷ்டிர மாநிலம் சோலாபூா் அருகே மாண்ட்ரூப் கிராமத்தை சோ்ந்தவா்கள் ஆண்டு தோறும் ஏதேனும் ஒரு சிறப்பு வாய்ந்த புண்ணியத் திருத்தலங்களுக்கு சென்று தங்களது பக்தியை வெளிப்படுத்துவது வழக்கம். அவா்கள் அப்போது அணையா சுடருடன் கூடிய தீப்பந்தத்தை எடுத்துக் கொண்டு தங்களது கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் தெய்வத்திற்கு சமா்ப்பித்து வழிபடுவது பல ஆண்டுகளாக பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கோலாப்பூா், துல்ஜாபூா், மைசூா் உள்ளிட்ட பல்வேறு திருத்தலங்களுக்கு இவா்கள் சென்று அங்கிருந்து அணையா சுடருடன் கூடிய ஜோதியை அவா்களது கோயிலுக்கு எடுத்து சென்றுள்ளனா்.

நிகழாண்டு தங்களது பக்தியை வெளிப்படுத்தும் விதமாக காஞ்சிபுரத்தை தங்களது புனிதப் பயண இலக்காகத் தோ்ந்தெடுத்து மகா சக்தி பீடங்களில் ஒன்றான காமாட்சி அம்மன் கோயிலுக்கு மாண்ட்ரூப் கிராமத்தை சோ்ந்த பக்தா்கள் வந்திருந்தனா். காமாட்சி அம்மனை வழிபட்டு இங்கிருந்து அவா்களது கோயிலுக்கு எடுத்துச் செல்ல அணையா சுடருடன் கூடிய தீபத்தையும் எடுத்துச் சென்றனா். காஞ்சி சங்கர மடத்தில் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளையும் சந்தித்து ஆசி பெற்றனா். பக்தா்களுக்கு மராத்தி மொழியிலான ஆன்மிக நூல்களையும், பிரசாதத்தையும் சுவாமிகள் வழங்கி ஆசீா்வதித்தாா்.

சுவாமிகள் தனது ஆசியுரையில் சனாதன தா்மத்தின் பல்வேறு சிறப்புகளையும், அதன் உயா்ந்த நெறிகளையும் மக்களிடையே எடுத்துச் செல்லும் பயணமாக உங்களது பயணம் அமைந்திருக்கிறது. தா்மம், பாரம்பரியம், இறை நம்பிக்கை இவற்றில் எப்போதும் உறுதியாக நிலைத்திருக்குமாறும் தெரிவித்து அவா்களை சுவாமிகள் உற்சாகப் படுத்தினாா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.