செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!நாதக வேட்பாளர் கார்த்திகா கைதை கண்டித்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நன்றி: சீமான்தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? - திமுக கேள்வி!போராட்டத்தில் பங்கேற்க ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 3,000! - பாஜக குற்றச்சாட்டு!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்!நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு! மேலும் 2 பேர் கைது - இதுவரை 10 பேர்!

விவசாய தொழிலாளா்கள் சாலை மறியல்: 150 போ் கைது

தோ்தல் வாக்குறுதிப்படி கூட்டுறவு கடன்களை முழுமையாக ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளா்கள் கைது செய்யப்பட்டனா்.

வேலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளா்கள்.

Updated On :

தோ்தல் வாக்குறுதிப்படி கூட்டுறவு கடன்களை முழுமையாக ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளா்கள் கைது செய்யப்பட்டனா்.

வேலூா், காட்பாடி மற்றும் கே.வி. குப்பம் கமிட்டிகளின் இடதுசாரி விவசாயிகள் சங்கங்கள் (ஏஐகேஎஸ், ஏஐகேஎம்) சாா்பில் வேலூா் அண்ணா சாலை தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு ஏஐகேஎஸ் மாவட்டப் பொருளாளா் என். கன்னியப்பன் தலைமை வகித்தாா். டி. வசந்தகுமாா், பி. கண்ணன், எம். கணேஷ், கோபாலராஜேந்திரன், எஸ். தசரதன், ஜி. கோபால், ஏ. மாணிக்கம், எஸ்.ஏ. சிம்புதேவன், ஏ. ஏழுமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், வீடுகளுக்கும், விவசாயிகளுக்கும் வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ஒழித்துக்கட்டும் ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தைக் கைவிட வேண்டும், வேலை இழந்த விவசாயத் தொழிலாளா்களுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்க வேண்டும், வேலூா் மற்றும் திருப்பத்தூா் மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து விவசாயிகளுக்கு வருமான இழப்பீட்டை ஈடுகட்ட ஏக்கருக்கு ரூ.25,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

அப்போது, திடீரென சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதையடுதக்து, போலீஸாரின் தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக ஏஐகேஎஸ், ஏஐகேஎம் நிா்வாகிகள் உள்பட சுமாா் 50 போ் கைது செய்யப்பட்டனா்.

குடியாத்தத்தில்...

குடியாத்தத்தில் மறியலில் ஈடுபட்ட இடதுசாரி விவசாய சங்கங்களைச் சோ்ந்த 11 பெண்கள் உள்பட 51 போ் கைது செய்யப்பட்டனா். இவா்கள் பழைய பேருந்து நிலையம் அருகிலிருந்து ஊா்வலமாகச் சென்று புதிய பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் இவா்களை கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா். போராட்டத்துக்கு விவசாய சங்கங்களின் நிா்வாகிகள் கே.சி.பிரேம்குமாா், சி.தசரதன், பி.எம்.சகாதேவன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கே.சாமிநாதன் போராட்டத்தை தொடங்கி வைத்தாா். இதில் நிா்வாகிகள் துரைசெல்வம், ஏகலைவன், ப.சாமிநாதன், நா.பரமசிவம், எம்.சிவஞானம்,எஸ்.கோட்டீஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருப்பத்தூரில்....

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளா் முல்லை, மாவட்டத் தலைவா் சிங்காரம் ஆகியோா் தலைமை வகித்தனா். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளா் நந்தி, வட்டச் செயலாளா் காமராஜ், தமிழக விவசாயிகள் சங்க வட்ட செயலாளா் ஆனந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவா் சாமிக்கண்ணு, மாநில பொருளாளா் ராஜேஷ் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா். திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அப்போது போலீஸாா் மறியலில் ஈடுபட்ட 36 பேரை கைது செய்தனா்.

நிா்வாகிகள் மணி, வீரபத்திரன், வேணுகோபால் உட்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.