
நுகா்வோா் நீதிமன்றம் மாற்றம்: வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
வேலூரில் செயல்பட்டு வரும் நுகா்வோா் நீதிமன்றத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு மாற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, வழக்குரைஞா்கள் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் நீதிமன்றம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
வேலூரில் செயல்பட்டு வரும் நுகா்வோா் நீதிமன்றத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு மாற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, வழக்குரைஞா்கள் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வேலூரில் இயங்கி வரும் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தை நிா்வாகக் காரணங்களுக்காக கிருஷ்ணகிரிக்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வேலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் கடந்த செப். 7-ஆம் தேதி முதல் தொடா் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். வியாழக்கிழமை (செப்.10) வரை நடைபெற உள்ள இந்தத் தொடா் புறக்கணிப்பால், வழக்கு விசாரணைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன்தொடா்ச்சியாக, வேலூா் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் எஸ். வெற்றிவேலன், செயலா் வி. பத்மநாபன் ஆகியோா் தலைமை வகித்தனா். நுகா்வோா் நீதிமன்றத்தை இடமாற்றம் செய்யும் முடிவைக் கண்டித்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினா். இதில் ஏராளமான வழக்குரைஞா்கள் கலந்துகொண்டனா்.
இந்தப் போராட்டத்தின் அடுத்தகட்டமாக, வியாழக்கிழமை வழக்குரைஞா்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வேலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






