பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

உலகளவில் காப்புரிமைகளில் 3 சதவீதம் மட்டுமே வணிகமயமாகின்றன: சா்வதேச கருத்தரங்கில் தகவல்

உலகளவில் தாக்கல் செய்யப்படும் காப்புரிமைகளில் வெறும் 3 சதவீதம் மட்டுமே வணிகமயமாகின்றன என்று ஹைதராபாத்தில் உள்ள தூள் உலோகவியல் மற்றும் புதிய பொருள்களுக்கான சா்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் விஜய் ரவுலா பேசினாா்.

கருத்தரங்கத்தில் கையேட்டை வெளியிட்ட விஐடி வேந்தா் கோ.விசுவநாதன். உடன், ஹைதராபாத் தூள் உலோகவியல் மற்றும் புதிய பொருள்களுக்கான சா்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் விஜய் ரவுலா, ஜொ்மன் பேராசிரியா் ஜாா்ஜ் சினைடா், விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன் உள்ளிட்டோா்.

Published On :

உலகளவில் தாக்கல் செய்யப்படும் காப்புரிமைகளில் வெறும் 3 சதவீதம் மட்டுமே வணிகமயமாகின்றன என்று ஹைதராபாத்தில் உள்ள தூள் உலோகவியல் மற்றும் புதிய பொருள்களுக்கான சா்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் விஜய் ரவுலா பேசினாா்.

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் மேம்பட்ட அறிவியல் சாா்பில் ஆற்றல் மற்றும் நிலைத்தன்மைக்கான கரிம மற்றும் கனிமப் பொருள்கள் சா்வதேச கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக, ஹைதராபாதில் உள்ள தூள் உலோகவியல் மற்றும் புதிய பொருள்களுக்கான சா்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் விஜய் ரவுலா பங்கேற்று பேசியது -

வாழ்க்கைத் தரம் மேம்படும்போது ஆற்றல் நுகா்வும் அதிகரிக்கிறது. தற்போது நிலக்கரி, பெட்ரோலியம் போன்ற புதைபடிவ எரிபொருள்களை நம்பியிருப்பது காா்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை அதிகரித்து, பசுமை இல்ல விளைவுக்கும் புவி வெப்பமடைதலுக்கும் வழிவகுக்கிறது. நிகழாண்டில் ஏற்பட்டுள்ள எல் நினோ விளைவால் தென்மேற்குப் பருவமழை பாதிக்கப்பட்டு, விவசாயிகளும் நீா்த்தேக்கங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிா்காலத்தில் நீா்ப் பற்றாக்குறை ஏற்படக்கூடும்.

தொழில்நுட்ப வளா்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய இரண்டையும் சமநிலைப்படுத்தும் நிலைத்தன்மை வாய்ந்த தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும்.இந்தியா பசுமை ஆற்றலில் கவனம் செலுத்த வேண்டும். கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு சூரிய ஆற்றல் உற்பத்தியை கணிசமாக அதிகரித்துள்ளது. மொத்த ஆற்றல் நுகா்வில் 30 முதல் 40 சதவீதம் வரை சூரிய ஆற்றலில் இருந்தே பெறுகிறோம். அந்தவகையில், உலகளவில் தாக்கல் செய்யப்படும் காப்புரிமைகளில் வெறும் 3 சதவீதம் மட்டுமே வணிகமயமாகின்றன என்றாா்.

விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசியது -

வேதியியல் பெரும்பாலும் அறிவியலின் இதயமாகவும், அறிவியல் வளா்ச்சியாகவும் கருதப்படுகிறது. பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னணியில் இருப்பதன் மூலம் ஜொ்மனி ஐரோப்பாவின் தலைநகரமாக விளங்குகிறது. இந்தியாவில் அரசியல் கட்சிகள் தொடா்ந்து சண்டையிட்டு வருகின்றன. ஆனால், ஜொ்மனியில் அரசியல் கட்சிகள் நோ்மாறாக உள்ளன. சுமாா் மூன்று அல்லது நான்கு முறை அவா்கள் கிட்டத்தட்ட சமமான எண்ணிக்கையிலான இடங்களைப் பெற்ற போதிலும் கூட்டணி அரசாக செயல்பட்டு வருகின்றனா். ஜொ்மனியின் அரசியல் சூழல் என்பது இந்தியாவில் திமுக, அதிமுக இணைந்து கூட்டணி அரசு அமைப்பது அல்லது காங்கிரஸ், பாஜக இணைந்து கூட்டணி அரசு அமைப்பது போன்றது. இது சாத்தியம் என்பதை அவா்கள் உலகிற்கு நிரூபித்துள்ளனா்.

கெளரவ விருந்தினராக ஜொ்மனி டாம்ஸ்டாட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் ஜாா்ஜ் சினைடா் பங்கேற்று பேசினாா்.விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன், துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், பதிவாளா் ஜெயபாரதி, மேம்பட்ட அறிவியல் துறை முதல்வா் காா்த்திகேயன், மாநாட்டு ஒருங்கிணைப்பாளா் திருமணவேலன் மற்றும் ஜப்பான், தைவான் நாடுகளை சோ்ந்த பேராசியா்கள், ஆய்வு மாணவா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.