டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

உலகத் தமிழ் செம்​மொழி மாநாடு: அறி​வுக் கருவூலத்​தின் அவல நிலை​யைப் போக்​குமா அரசு?!

உடுமலை,டிச.24:ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக வேண்டு மென சாதிக்கத் துடிக் கும் மாணவ, மாணவிக ளின் அறி வுக் கருவூல மாக விளங்கி வரும் நூலகத் தின் அவல நிலையை போக்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டியது அவசியம். "பகுத்தறி வுக

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:47 am

வி.கே. ராஜமா​ணிக்கம்

உடுமலை,டிச.24:ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக வேண்டு மென சாதிக்கத் துடிக் கும் மாணவ, மாணவிக ளின் அறி வுக் கருவூல மாக விளங்கி வரும் நூலகத் தின் அவல நிலையை போக்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

"பகுத்தறி வுக் கவிஞராயர்' என தமிழக மக்க ளால் அன் போடு அழைக்கப்ப டும் உடுமலை நாராயணகவி யின் பெய ரில் அமைந் துள்ள மணி மண்டபத்தை முதல்வர் மு.கருணா நிதி 23}2}2001ல் திறந்து வைத் தார்.

சுற்றி லும் பூங்காவுடன் அழ குற அமைக்கப்பட்ட இந்த மணி மண்டபத்தை ஆண்டு முழுவ தும் தொடர்ந்து பராம ரிப்ப தில் பல் வேறு நடைமு றைச் சிக்கல்கள் ஏற்பட்டது. இத னால் 28}09}2004 முதல் உடுமலை முதல் நிலை நூலகப் பராம ரிப் பின் கீழ் கொண்டு வரப்பட்டது.

இதைத் தொடர்ந்து ரூ.15 லட்சம் செல வில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர் வுக் கான புத்தகங்கள், கேட், யுசிஜி, நெட், ஐஐடி, ஐஐஎம், ரயில்வே போன்ற போட் டித் தேர்வுக ளுக் கான புத்தகங்க ளும், கணிப் பொறியியல், அறி விய லில் வளர்ச் சிகள், உலக வரலாறுகள் உள் ளிட்ட புத்தகங்க ளும் இங்கு கொண்டு வரப்பட்டன. இதைத்  தொடர்ந்து புத்தகங்கள் வைக்க அலமாரிக ளும், பிற தளவாடங்க ளும்  பொதுமக்களிடமி ருந்து நன்கொடையாகப் பெறப்பட்டன.

ஆனால், இதன் பிறகு கடந்த 5 ஆண்டுக ளாக இந்த நூலகத்தை எந்த வித விரி வாக்க மும் செய்யாம லேயே விட்டு விட்டனர். சாதிக்கத் துடிக் கும் மாணவ, மாணவிகளை இது சோர்ந்து போகச் செய்து விட்டது.

எனவே, கோவை யில் நடைபெ றும் உலகத் தமிழ் செம் மொழி

மாநாட்டை யொட்டி இந்த நூலகத் திற்கு போது மான நிதியை ஒதுக்கி விரி வாக்கம் செய்ய முதல்வர் நடவ டிக்கை  எடுக்க வேண் டும் என்ற கோரிக்கை எழுந் துள்ளது.

இது குறித்து உடுமலை நாராயணகவி இலக்கியப் பேரவை நிர்வாகிகள் கூறியது: சாதித்த மாணவர்கள்: இந்த நூலகத் தில் அமர்ந்து படித்த உடுமலை பகுதி மாணவர்கள் மோகன் தாஸ்  கரம்சந்த் காந்தி மற் றும் எஸ்.செந் தில்கு மார் ஆகி யோர்  ஐஏஎஸ் முடித்தது சாதனை படைத் துள்ளனர்.

இந்நிலை யில், இந்த நூலகத் தில் 2001 ம் ஆண்டு வரையி லான புத்தகங்கள் மட் டுமே வைக்கப்பட் டுள்ளது. அதற்கு பிறகு கடந்த 7 வருடங்க ளாக புதிய புத்தகங்கள் இந்த நூலகத் தில் இடம்பெற வில்லை. ஐஏஎஸ், ஐபிஎஸ் மற் றும் சிவில் சர் வீஸ் உள் ளிட்ட பல் வேறு போட் டித் தேர்வுக ளில் நடப் பாண்டு தொடர் பாக கேட்கப்ப டும் கேள்விக ளுக்கு பதில் அளிக் கும் விதத் தில் புதிய புத்தகங்களை இங்கு வைக்க ஏற் பாடு செய்ய வேண் டும்.

உடுமலை யில் அரசு மற் றும் தனி யார் கல்லூரிக ளைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரத் திற் கும் அதிகமா னோர் படித்து வரு கின்றனர். இந்நிலை யில் தின மும் நூற் றுக்கணக்கா னோர் நூலகத் திற்கு வரும் நிலை யில் 25 நபர்களே உட் கார்ந்து படிக்க முடிகிறது. நிறைய பேர் நின்று கொண்டே படித்து வரு கின்றனர்.

எனவே, நூலகத் தில் குறைந்த பட்சம் நூறு பேர் உட் கார்ந்து படிக் கும் அள விற்கு கட்டடத்தை விரி வாக்கம் செய்ய வேண் டும்.

அதே போல், ஜெராக்ஸ் எடுக்க ஒரு பிர திக்கு 75 பைசா என்றி ருப்பதை இங்கு வரும் ஏழை மாணவ, மாணவிக ளின் வச திக் காக 25 பைசா வாக குறைக்க வேண் டும்.

குறிப் பாக, இங்கு வரும் மாணவர்க ளுக்கு குடி நீர் வசதி செய்து தர வேண் டும். இதற் காக உடுமலை நக ராட்சி சார் பில் இலவச மாக ஒரு குடி நீர் இணைப்பை ஏற்ப டுத் தித் தர வேண் டும், முக்கிய மாக இந்த நூலகத்தை சுற்றி லும் உள்ள

ஆக்கிர மிப்புகளை அகற்ற வேண் டும், இந்த நூலகத் திற் கென ஒரு நிரந்தர பணியிடத்தை உரு வாக்க வேண் டும் என்றனர்.

இந்த அறி வுக் கருவூலத் தில் இருந்து சிறந்த ஐஏஎஸ், ஐபிஎஸ், பொருளா தார அறிஞர்கள், அரசு உயர் அதிகாரிகள், விஞ்ஞானிகள், தமிழறிஞர்கள், தொழில் நுட்ப மேதைகள் உரு வாக வேண் டும் என்பது தான் அனைவரு டைய ஆர்வம்.

தமிழக முதல்வர் இதற்கு உதவ வேண் டும் எனபதே அனைவரது எதிர் பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.