ஈரோடு, நவ.26: ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளால் உறுதியான மாற்றம் மேற்கொள்ளப்படவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள எதிர்பார்க்கின்றனர்.
÷வறுமையில் வாடும் குடும்பங்களுக்கும் உணவு கிடைக்கவேண்டும் என்ற நோக்கில் செயல்படுத்தப்பட்டுவரும் ஒரு கிலோ அரிசி ரூ.1-க்கு வழங்கும் திட்டம், கடத்தல்காரர்களுக்கு சொத்து மதிப்பினை உயர்த்தும் தொழிலாக மாறிவிட்டது. கடந்த அதிóமுக ஆட்சியில் ரூ.3.50-க்கு வழங்கப்பட்ட ரேஷன் அரிசி, 2006-ல் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் அதே ஆண்டு மே, 13-ல் ரூ.2 ஆக விலை குறைக்கப்பட்டது. இதன்பிறகு கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 15-முதல் கிலோ அரிசி ரூ.1-ஆக விலை குறைக்கப்பட்டது. விலை குறைக்கப்படுவதால் ஏழை மக்கள் பயனடைகிறார்களோ இல்லையோ, அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களின் காட்டில்தான் மழை.
÷தமிழகத்தில் மொத்தமுள்ள 2 கோடி 56 ஆயிரத்து 107 ரேஷன் கார்டுகளில், சுமார் 1.95 கோடி ரேஷன் கார்டுகளுக்கு அரிசி விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாதமும் ஏறத்தாழ 3 லட்சம் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த அரிசி ஏழை மக்களுக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் கிடைக்கிறது. இதனால் ரேஷன் அரிசி பயன்படுத்தும் அவசியம் இல்லாத பலர் ரூ.4 முதல் ரூ.7 வரை லாபத்துக்கு விற்றுவிடுகின்றனர்.
÷கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களில் அரிசிக்கு நல்ல விலை கிடைப்பதால் பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியை வாங்கி, அதனை லாரி மற்றும் ரயில்களில் கடத்துவதற்கெனவே தனியாக ஒரு கும்பல் செயல்படுகிறது. கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு கிலோ அரிசிக்கு ரூ.5 வரை லாபம் கிடைக்கிறது. இதனால் கடத்தல் தொழில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஒரு சில இடங்களில் ஆளும்கட்சியினரே அரிசி கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2007-ம் ஆண்டில் 20 ஆயிரத்து 36 டன் அரிசியும், 2008-ம் ஆண்டில் 14901 டன் அரிசியும் கடத்தலின்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுத்துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடப்பாண்டில் இதுவரை ஏறத்தாழ 12 ஆயிரம் டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
÷மாவட்ட வழங்கல் அலுவலரின் கீழ் இயங்கும் பறக்கும் படை, உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸôர் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் அரிசி கடத்தலை தடுக்க தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாலும், இவர்களையும் மீறி கடத்தல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தங்களுடைய கண்காணிப்பையும் மீறி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் ஏறத்தாழ 1000 டன் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக என்று வழங்கல்துறை அதிகாரிகளே ஒப்புக்கொள்கின்றனர்.
÷மாவட்டத்துக்கு 50 அதிகாரிகளையும், மாநிலம் முழுவதும் 236 உணவுக் கடத்தல் தடுப்பு போலீஸôரையும் மட்டும் வைத்துக்கொண்டு அரிசி கடத்தலை தடுப்பது எளிதானதல்ல.
÷ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் தனி போலீஸ் படை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை கொண்ட பறக்கும் படைகளை அமைப்பதன் மூலம் அரிசி கடத்தலை பெருமளவில் குறைக்க முடியும். 10 ஏக்கர் விவசாயம் நிலம் வைத்துள்ளவர்களும் ரேஷனில அரிசி வாங்குகிறனர்.
உணவுக்கு கஷ்டப்படுவர்களுக்கு கிலோ ரூ1-க்கும், மற்றவர்களுக்கு உற்பத்தி விலையிலும் அரிசி வழங்கலாம்.
÷ரேஷன் மூலம் ரூ.1-க்கு விநியோகம் செய்யப்படும் அரிசிக்கு ரூ.5 செலவு செய்வதாக அமைச்சர்கள் ஒவ்வொரு அரசு விழாவிலும் பேசுகின்றனர். கடத்தலை கட்டுப்படுத்துவது மற்றும் தகுதியானவர்களுக்கு மட்டும் அரிசி வழங்குவதன் மூலம் அரசுக்கு ஏற்படும் இழப்பு பெருமளவில் குறைய வாய்ப்புள்ளது.
÷அரசியல்வாதிகள் ஒரு சிலரின் சுரண்டலுக்கு துணைபோகாமல் மக்கள் நலனில் அக்கறை கொண்டு அரிசி கடத்தலை தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை யெடுக்கவேண்டும் என்பதே இந்த சமுதாயத்தின் மீது அக்கறை உள்ளவர்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: மாலை 6 மணி வரை 91.74% வாக்குகள் பதிவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

