மேட்டுப்பாளையம், மே 31: அரசியல் அல்லது மதம் மூலம் சமுதாயம் ஒருபோதும் வளர்ச்சி அடையாது. கல்வி மூலம் மட்டுமே சமுதாயம் வளச்சி அடைய முடியும். அதுவே வலுவானது; பாதுகாப்பானதும் கூட என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.
÷ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை சார்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, சிறுமுகை விஜயலட்சுமி மெட்ரிக் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
÷விழாவுக்கு சென்னை உயநீதிமன்ற நீதிபதி ரகுபதி தலைமை வகிக்க, மேற்கு மண்டல ஐ.ஜி. சிவனாண்டி, பள்ளிக்கல்வி இயக்குனர் டாக்டர் பெருமாள்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி வரவேற்றார்.
÷விழாவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி கவிஞர் வைமுத்து பேசியது:
÷சமுதாயத்தில், கொடுக்கப் பிறந்தவர்களுக்கே அதிக அளவில் செல்வம் வந்து சேருவதுடன், அவர்களுக்கு நீடித்த ஆயுளும் கிடைக்கும்.
நன்கு கல்வி கற்கும் ஏழை மாணவர்கள் பொருளாதாரம் காரணமாக உயர்கல்வி வாய்ப்பு இழக்கக் கூடாதென்ற நோக்கத்தில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் கல்வி உதவிகளைச் செய்துவரும் இந்த அறக்கட்டளையின் செயல்பாடு பாராட்டிற்குரியது.
÷இந்த உதவி பெறும் மாணவ மாணவியர் எதிர்காலத்தில் தங்களால் இயன்ற கல்வி உதவிகளை பிறருக்கு வழங்க வேண்டும். மாணவப் பருவத்தில் மாணவர்கள் தூக்கத்தையு சோம்பேறித்தனத்தையும் குழிதோண்டிப் புதைத்தால் மட்டுமே எதிகாலத்தில் வெற்றிச் சிகரங்களை அடைய முடியும்.
÷கொடைகளில் சிறந்தது பிறருக்கு உணவு கொடுப்பது, அரிசி கொடுப்பது, விதைநெல் கொடுப்பது என்ற மூன்று வகையாகும். இதில் விதைநெல் கொடுக்கும் உதவியே சமுதாயத்தில் அனைவரையும் சென்றடையும். இந்த அறக்கட்டளை சார்பில் கல்விக்கொடை மூலம் வழங்கப்படும் விதைநெல்லானது, நிச்சயம் எதிர்காலத்தில் பன்மடங்கு பெருகி பலருக்கும் பயன்தரும்.
÷இந்த கல்வி உதவிபெறும் மாணவ மாணவியர் உயர்ந்த லட்சியங்களை நிர்ணயித்து அவற்றை நோக்கி கடுமையாக உழைத்தால், இந்தியா வல்லரசாக உருவாவதற்கு, நிச்சயம் தங்கள் பங்களிப்பை செலுத்த முடியும், என்றார்.
÷விழாவில், நீதிபதி ரகுபதி பேசியது:
÷இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவது, பொருளாதாரத்தில் பின்தங்கிய பெற்றோருக்கு பெரும் சுமையாக உள்ளது. கல்வி இன்று ஒரு வியாபாரப் பொருளாகி விட்டது.
÷அன்றைய காலகட்டத்தில் என்னைப் போன்று சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்களுக்கும்கூட வாய்ப்புக்கள் நன்கு அமைந்ததால், கல்வி மூலம் இன்று நல்ல நிலைக்கு உயர முடிந்தது.
ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி எட்டாக்கனியாக உள்ள இன்றைய காலகட்டத்தில், நன்கு படிக்கும் ஏழை மாணவ மாணவியருக்கு கல்விஉதவி செய்வது பாராட்டிற்குரியது என்றார்.
÷÷தொடர்ந்து, சிறந்த மதிப்பெண் பெற்ற 4,000 பள்ளி மாணவர்கள் மற்றும் 3,500 கல்லூரி மாணவ மாணவியருக்கு ரூ. 8.75 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டன.
÷விழாவில் மேற்கு மண்டல ஐ.ஜி. சிவனாண்டி, பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முடிவில் மாவட்ட ஒக்கலிக மகாஜன சங்க தலைவர் வெள்ளியங்கிரி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரேவதி, ராதிகா, ராதா... ர வரிசையில் பெயர் சூட்டிய பாரதிராஜாவின் ஃபார்முலா!
இனி அண்ணாமலை vs விஜய்! பாஜகவிலிருந்து அமர் பிரசாத் ரெட்டி விலகல்!

பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!

புதுச்சேரி தொழிலதிபரிடம் ரூ.1.27 கோடி மோசடி: 3 பேர் கைது!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


