நாமக்கல், செப். 21: நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வேளாண்துறைக்குச் சொந்தமான கட்டடங்கள் பயன்பாடில்லாமல் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
நாமக்கல்-கோட்டை சாலையில் உள்ள மாவட்ட நூலகம், உழவர் சந்தை, வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ஆகியவற்றின் அருகே உள்ளது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம். 10-க்கும் மேற்பட்ட அறைகளுடன் 2 அடுக்கு மாடியுடன் கூடியது இக் கட்டடம். இதன் அருகில் வேளாண் அலுவலர் குடியிருப்பு உள்ளது.
இக் குடியிருப்பில் 2 வீடுகள் உள்ளன. கடந்த 30.6.1988-ல் அப்போதைய நாமக்கல் நகராட்சித் தலைவர் மு. பழனிவேலன் தலைமையில், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எப். பாரூக்கி, இதைத் திறந்து வைத்தார். தற்போது, இந்தக் கட்டடம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. பழைய ஆவணங்கள், பயன்படுத்தாத தளவாட பொருட்கள் இந்த வீடுகளில் வைத்துப் பூட்டப்பட்டுள்ளன. கதவுகள், ஜன்னல் கண்ணாடிகள் அனைத்தும் உடைந்துள்ளன. இதே நிலையில் அலுவலர் குடியிருப்புக் கட்டடமும் காட்சியளிóக்கிறது.
கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இக் கட்டடம் பயன்படுத்தப்படாமல் உள்ளதால் சமூவிரோத நடவடிக்கைகளுக்கு மிகவும் வசதியாக அமைந்துள்ளது. நகரின் மையத்தில் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள இக்கட்டடத்துக்கு அருகில் கமலாலய குளம் மட்டுமே உள்ளது. வேளாண்மைத்துறை கட்டடம் பயன்படுத்தாமல் உள்ளதால் இந்தப் பகுதிக்கு மக்கள் யாரும் வருவதில்லை.
இதனைப் பயன்படுத்தி மாலை நேரத்தில் மது அருந்துவது, கஞ்சா அடிப்பது மற்றும் பல்வேறு சமூகவிரோத நடவடிக்கைகளுக்கு இப்பகுதி பெரிதும் பயன்படுகிறது. இந்த நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக போதிய விளக்குகளும் இல்லை. மாலை நேரத்திலேயே இருட்டாகிவிடும். இதனைப் பயன்படுத்திச் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் இங்கு முகாமிட்டுள்ளனர்.
பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு பயன்படாமல் இருப்பதுடன், சமூக விரோத நடவடிக்கைகளுக்கு அச்சாரமாக இக்கட்டடங்கள் இருப்பது பொதுமக்களை
வேதனையடையச் செய்துள்ளது. நகரில் பல்வேறு அரசு அலுவலகங்கள் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் சூழலில் இந்த கட்டடங்களை பழுது பார்த்தோ, புதுப்பித்தோ அரசு பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

