ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

"தனிமனித மாற்றமே சமுதாய மாற்றம்'

வெள்ளக்கோவில்,ஜன.8: அனைத்து நிலைகளிலும் சமுதாயத்தை மேம்படுத்த  தனி மனித மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் இயக்கம் செயல்பட்டு வருவதாக இயக்கம் சார்பில் தெரிவிக்கப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

வெள்ளக்கோவில்,ஜன.8: அனைத்து நிலைகளிலும் சமுதாயத்தை மேம்படுத்த  தனி மனித மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் இயக்கம் செயல்பட்டு வருவதாக இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

   வெள்ளக்கோவிலில் இயக்கம் சார்பில் தொடங்கிய 12 ஜோதிர்லிங்க தரிசனம் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் (ஜன.10) திங்கள்கிழமை வரை நடைபெறுகிறது.

நம் நாட்டில் சிவலிங்க வழிபாட்டில் புகழ் பெற்ற 12 திருத்தலங்களின் கோயில் மாதிரிகள் அரங்கில் வடிவமைத்து வைக்கப்பட்டுள்ளன.

மனிதன் அவதரிப்பு, உலக நடப்பில் நல்லது-கெட்டது, தெய்வீக சக்தி போன்றவை குறித்து பட விளக்கம் தரப்படுகிறது.

இந்த இயக்கம் 1936-ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் ஏறத்தாழ 140 நாடுகளில் 9000-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.

ஒளி வடிவமாக உள்ள இறைவன், எங்களது குரு பிரஜா பிதா பிரம்மா உடலில் பிரவேசம் செய்து, திவ்ய அவதாரம் எடுத்துள்ளதாக நம்புகிறோம்.

ஒருங்கிணைந்த இந்தியாவில் கராச்சியில் அவதரித்த இவர் தற்போது நம்மிடையே இல்லை. பக்தி, தியான மார்க்கம் மூலம் மனித வளத்தை மேம்படுத்த அவர் அருளிய போதனைகளை பரப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என இயக்கத்தின் ஆன்மிக சகோதரி ராஜேஸ்வரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.