தனியார் கட்டடத்தில் தீ: முழுவதும் எரிந்து சேதம்

கோவை, ஜன. 8: கோவை- காந்திபுரம், லட்சுமி நகரில் தனியார் கட்டடத்தில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில், கட்டடம் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இந்த கட்டடம் காந்திபுரம், 2-வது வீதி, லட்சுமி நகர் பகுதி
Updated on
1 min read

கோவை, ஜன. 8: கோவை- காந்திபுரம், லட்சுமி நகரில் தனியார் கட்டடத்தில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில், கட்டடம் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

இந்த கட்டடம் காந்திபுரம், 2-வது வீதி, லட்சுமி நகர் பகுதியில் எட்வின் என்பவருக்குச் சொந்தமானது. அவர் பழைய வீட்டை வாங்கி, தற்போது புனரமைப்புப் பணிகளைச் செய்து வருகிறார்.

சனிக்கிழமை மாலை பணிகளை முடித்துவிட்டு கட்டுமானத் தொழிலாளர்கள் வெளியே சென்றுவிட்டனர். இந்நிலையில், இரவில் திடீரென தீப் பற்றி எரிந்து, கட்டடம் முழுவதும் பரவியுள்ளது. பெயின்ட் உள்ளிட்ட பொருள்கள், மரச்சாமான்கள் வைத்திருந்ததால் தீ மளமளவென பரவியுள்ளது.

  தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு கோவை கோட்ட தீயணைப்பு அலுவலர் நாதன் தலைமையில் வந்த தெற்கு தீயணைப்புப் படையினர், நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா தீயணைப்புப் பணிகளைப் பார்வையிட்டு, தீயணைப்பு வண்டிகளுக்கு மாநகராட்சி லாரிகளில் தண்ணீர் கொண்டுவர ஏற்பாடு செய்தார்.

மாநகரக் காவல் உதவி ஆணையர் முத்துராஜ் தலைமையிலான போலீஸôர் அப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்தனர்.

செல்லப் பிராணிகள் கண்காட்சி

கோவை, ஜன. 8: கோவை செல்லப்பிராணிகள் நலச்சங்கம் சார்பிலான இரண்டு நாள் செல்லப்பிராணிகள் கண்காட்சி, சிஎஸ்ஐ மேனிலைப்பள்ளி மைதானத்தில் சனிக்கிழமை துவங்கியது.

கிளி, புறா, குருவி, கோழி, வாத்து, ஈமு கோழிகள், அழகிய குதிரைகள், குட்டை ஆடுகள், அரிய வகை நாய்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. 150 வகை பறவைகள் இடம் பெற்றிருந்தன.

இதில் 100 வகை குருவிகள், 50 வகை புறாக்கள், 30 வகை கிளிகள் இடம் பெற்றிருந்தன. 2 அடி உயரம் உள்ள குட்டை ஆடுகள், ஜெர்மன் ஷெப்பர்டு, டாபர்மேன் போன்ற நாய் வகைகளும் இடம் பெற்றிருந்தன.

பள்ளிக்குழந்தைகள் செல்லப்பிராணிகளை ஆர்வமுடன் கண்டுகளித்தனர். பிராணிகளின் அணிவகுப்பு நடந்தது. செல்லப் பிராணிகளுக்கான உணவுப்பொருட்கள், உடைகள், அழகு சாதனப் பொருட்கள், ஆரோக்கியம் காக்கும் பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றன.   

சங்கத்தலைவர் தீபக் கூறுகையில், "பள்ளிகளில் இலவச நுழைவுக்கூப்பன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 10 வயதுக்கு  உட்பட்டவர்களுக்கு இலவசம். பார்வையாளர் நுழைவுக் கட்டணம் ரூ. 30. இந்தக் கண்காட்சி  4வது ஆண்டாக நடக்கிறது' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com