மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பகவத்கீதை மூலம் மனதைப் பண்படுத்தலாம்

பெ.நா.பாளையம், ஜன. 8: விருப்பு வெறுப்பற்ற நிலையை எய்திட மனதைப் பண்படுத்துவதே தியானத்தின் முக்கிய கோட்பாடு என்று, பகவத்கீதை விளக்கியுள்ளதாக, சுவாமி சின்மயானந்தாவின் சீடர் சுவாமி சுஷாந்த் தெரிவித்தார்.

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

பெ.நா.பாளையம், ஜன. 8: விருப்பு வெறுப்பற்ற நிலையை எய்திட மனதைப் பண்படுத்துவதே தியானத்தின் முக்கிய கோட்பாடு என்று, பகவத்கீதை விளக்கியுள்ளதாக, சுவாமி சின்மயானந்தாவின் சீடர் சுவாமி சுஷாந்த் தெரிவித்தார்.

கோவை சின்மயா மிஷன் சார்பில், பகவத்கீதையின் தியான விளக்க உரைகள் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி தொடக்க விழா, பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஜெயந்தி திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடந்தது.

நிகழ்ச்சிக்கு அரங்கசாமி நாயுடு அறக்கட்டளைத் தலைவர் ர.நாரயாணசாமி நாயுடு தலைமை வகித்தார். சித்ரா பாலசுப்பிரமணியம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில் தியானம் குறித்து சுஷாந்த் பேசியது:

தியானம் என்பது கெட்ட எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை எண்ணிக் கொண்டிருப்பதுவே ஆகும். குறிப்பாக துன்பமயமான எண்ணங்கள் மனதைவிட்டு அகல வேண்டும். அதை அகற்ற ஒரே வழிதான் தியானம்.

பிரச்னைகள் இல்லாத மனிதனில்லை. அவற்றை தீர்த்து எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய மனநிலையை உருவாக்கிக் கொள்வதே முக்கியம். தேனீயானது மகரந்தத்தை மட்டும் உறிஞ்சும். அதுபோல மனிதனும் நல்ல எண்ணங்களை மட்டுமே கிரஹித்துக் கொள்கின்ற மனப்பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

தியானத்தின் முக்கிய படிநிலைகளான மனசாந்தி, ஒருமுகப்படுத்துதல், விரிந்த அறிவைப் பெறுதல் ஆகியவற்றை நம்மால் பெற முடியுமானால், பண்பட்ட மனிதராகலாம்.

வெறுமனே பூஜை செய்வதற்காக பகவத்கீதை படைக்கப்படவில்லை. அதிலுள்ள தத்துவக் கருத்துக்களை எளிதாக அனைவராலும் புரிந்து கொள்ள முடியும். அதன்படி நடந்தால் நிறைவான மனிதராகலாம் என்றார்.

துவக்க நிகழ்ச்சியில் பாலமலை பக்தர் குழுவின் செயலாளர் சின்னராஜ், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பெ.நா.பாளையம் வட்டார நிர்வாகி எஸ்.வி.பழனிசாமி, புதுப்புதூர் ராமாநுஜக்கூடத்தின் செயலாளர் நாராயண ராமனாநுஜதாசன், குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வரும் 11ம் தேதி வரை இச்சொற்பொழிவு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை டாக்டர் அபிராமி கதிரேசன் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.