பெ.நா.பாளையத்தில் மாணவர் காங். தேர்தல்

பெ.நா.பாளையம், ஜன. 8: பெரியநாயக்கன்பாளையம் வட்டார மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஐஎன்டியுசி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் வட்டார அமைப்பில
Updated on
1 min read

பெ.நா.பாளையம், ஜன. 8: பெரியநாயக்கன்பாளையம் வட்டார மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஐஎன்டியுசி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது.

பெரியநாயக்கன்பாளையம் வட்டார அமைப்பில், ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் 120 பேரும், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ ஆகிய நிறுவனங்களில் 116 பேரும், பயனீர் கலை அறிவியல் கல்லூரியில் 74 பேரும் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில்  ஒவ்வொரு கல்லூரியிலும் 10 பேர் செயற்குழு நிர்வாகிகளாக தேர்ந்தெடுப்படுவர். இதற்கென நடந்த தேர்தலுக்கு, கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுள் ஒருவரான ஜியோபோல் தேர்தல் அதிகாரியாகச் செயல்பட்டார். அனைத்து மாணவர்களும் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

மூன்று மணி நேரம் நடந்த இத்தேர்தலுக்கான ஏற்பாடுகளை, இ.காங்கிரஸ் நகர செயலாளர் ஜெயகுமார், இளைஞர் காங்கிரûஸச் சேர்ந்த மகேஷ்குமார், தரன் ஆகியோர் செய்திருந்தனர். தேர்தல் முடிவுகள் ராகுல் காந்தி ஒப்புதலுடன் இணையதளம் வாயிலாக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com