ஈரோடு, ஜன. 8: ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி, ரூ. 25 லட்சம் மோசடி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கோவையை சேர்ந்தவர் சரவணக்குமார். இவர், தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து ஈரோடு, நாமக்கல், கோவை மாவட்டத்தை சேர்ந்த 5 பி.எட். பட்டதாரிகளிடம், ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தலா ரூ. 5 லட்சம் வாங்கினாராம். கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் போலி நியமன ஆணை அளித்து, மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சுமதி என்பவர், ஈரோடு குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீஸôர் விசாரனை நடத்தி, சரவணக்குமாரை (40) சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.