மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மணல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

பவானி, ஜன. 8: இயந்திரம் மூலம் மணல் அள்ளுவதை அனுமதிக்க வலியுறுத்தி மணல் லாரி உரிமையாளர்கள் பவானியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் (படம்).   தமிழகம் முழுவதும் ஆறுகளில் உள்ள மணல் குவாரிகளில் பொக்லைன்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

பவானி, ஜன. 8: இயந்திரம் மூலம் மணல் அள்ளுவதை அனுமதிக்க வலியுறுத்தி மணல் லாரி உரிமையாளர்கள் பவானியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் (படம்).

  தமிழகம் முழுவதும் ஆறுகளில் உள்ள மணல் குவாரிகளில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளுவதற்கும், லாரிகளில் ஏற்றுவதற்கும் அரசு தடை விதித்துள்ளது.

  இதனால், பெரும் காலதாமதம் ஏற்றபடும். எனவே, இயந்திரம் மூலம் மணல் அள்ளுவதை மீண்டும் அனுமதிக்க வலியுறுத்தி மணல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.ஹ

  மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் பிரகாஷ்ராஜ், பவானி நகர்மன்றத் தலைவர் துரை தலைமையில், பவானியில் லாரி உரிமையாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  பவானி-அந்தியூர் ரோடு பண்டாரப்பிச்சி கோயில் எதிரில் தங்களது லாரிகளை நிறுத்தினர்.

  பவானி, காளிங்கராயன்பாளையம், குமாரபாளையம், அந்தியூர், ஆப்பக்கூடல் மற்றும் அம்மாபேட்டை பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.