/

பூத் ஸ்லிப் வழங்கும் பணி நாளை துவக்கம்

 ஈரோடு, அக். 8: ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கும் வகையில், வீடுவீடாகச் சென்று வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி வரும் திங்கள்கிழமை துவங்குகிறது.  ÷ஈரோடு மாவட்டத்தில் உள்ளா

Updated On :20 செப்டம்பர் 2012, 5:19 am IST

 ஈரோடு, அக். 8: ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கும் வகையில், வீடுவீடாகச் சென்று வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி வரும் திங்கள்கிழமை துவங்குகிறது.

 ÷ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் 22ம் தேதி துவங்கியது. அக்டோபர் 3-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல், சின்னத்துடன் வெளியிடப்பட்டது. 17 மற்றும் 19-ம் தேதிகளில் தேர்தலும், 21-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது.

 ÷ஒரு மாநகராட்சி மேயர், 60 மாநகராட்சி கவுன்சிலர்கள், 19 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், 183 ஒன்றிய கவுன்சிலர், 225 ஊராட்சித் தலைவர், 2,093 ஊராட்சி வார்டு உறுப்பினர், 4 நகர்மன்றத் தலைவர், 102 நகராட்சி கவுன்சிலர்கள், 42 பேரூராட்சித் தலைவர், 630 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 3,363 உள்ளாட்சி பதவிகள் உள்ளன.

 ÷418 பதவிகளுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 2,945 பதவிகளுக்கு, 11,553 பேர் போட்டியிடுகின்றனர்.

 ÷மாவட்ட அளவில் 7 லட்சத்து 51 ஆயிரத்து 123 ஆண், 7 லட்சத்து 39 ஆயிரத்து 526 பெண், 47 திருநங்கைகள் என 14 லட்சத்து 90 ஆயிரத்து 696 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் உள்ளது. சிலருக்கு புகைப்படம் இன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளது. அனைத்து வாக்காளர்களும், ஓட்டுப் போடும் வகையில் அவர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் மூலம் பூத் ஸ்லிப் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது.

 ÷வாக்காளர்கள், வாக்குப்பதிவு மையத்தில் உள்ள பணி அலுவலர், அனைத்து வேட்பாளர்கள், பூத்தில் உள்ள முகவர்களுக்கு வழங்கும் வகையில் தேவையான எண்ணிக்கையில் வாக்காளர் பட்டியல் பிரின்ட் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளுக்கு ஒரிஜினல் பிரின்ட் ஒன்று வழங்கப்பட்டு, அதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல் நடத்தும் அலுவலகம் மூலம் தேவையான பிரின்ட் தயாரித்து, விதிகளின்படி அனைவருக்கும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 ÷பூத் ஸ்லிப்கள் வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று வழங்கப்படும். அந்தந்த பகுதி ஆசிரியர்கள், சத்துணவுப் பணியாளர்கள், விஏஓ போன்றோர் மூலம், இந்த ஸ்லிப்கள் வீடுகளுக்கு வழங்கப்படும். வீடுகளில் ஆட்கள் இல்லை எனில், அந்த ஸ்லிப்களை தனியாக சேகரித்து, அந்த வாக்காளருக்கான வாக்குப்பதிவு மையத்தில், வாக்காளர் விவரம் சரிபார்க்கும் அலுவலரிடம் அவை ஒப்படைக்கப்படும்.

 ÷பூத் ஸ்லிப் பெறாதவர்கள், வாக்களிக்க போகும்போது, அங்குள்ள அலுவலரிடம் விவரம் கூறி பூத் ஸ்லிப் பெற வேண்டும். பூத் ஸ்லிப்பில் புகைப்படம் இல்லாதவர்கள், தங்களது புகைப்படம் கொண்ட அடையாள அட்டை, ரேஷன் கார்டு போன்ற ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.