/

தேர்தல் விதி மீறினால் நடவடிக்கை: அச்சகங்களுக்கு எச்சரிக்கை

ஈரோடு, அக். 8: போஸ்டர்கள் மற்றும் நோட்டீஸ்களில் அச்சகத்தின் பெயர் இல்லாமல் அச்சடிக்கக் கூடாது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.  ÷உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் வால் போஸ்டர்கள், நோட்டீஸ்கள் அச்சட

Updated On :29 டிசம்பர் 2023, 12:15 am IST

ஈரோடு, அக். 8: போஸ்டர்கள் மற்றும் நோட்டீஸ்களில் அச்சகத்தின் பெயர் இல்லாமல் அச்சடிக்கக் கூடாது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

 ÷உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் வால் போஸ்டர்கள், நோட்டீஸ்கள் அச்சடித்து விநியோகம் செய்யலாம் என்றும் சுற்றுப் புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்படும் கொடிகள், பேனர்கள், போஸ்டர்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 ÷வேட்பாளர்கள் பிரசாரத்தின்போது பொதுமக்களிடம் வழங்குவதற்காக வால் போஸ்டர்கள், நோட்டீஸ்கள் உள்ளிட்டவைகள் அச்சடிக்கின்றனர். அந்த நோட்டீஸ்களில் கண்டிப்பாக அச்சகத்தின் பெயர், முகவரி, தொலைபேசி எண் மற்றும் பிரிண்ட் செய்யப்பட்ட நோட்டீஸ்கள், வால்போஸ்டர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களையும் பிரிண்ட் செய்ய வேண்டும். தேர்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாத அச்சகங்கள் மீது விதிமீறல் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.