வால்பாறை அரசுப் பள்ளிக்குள் சிறுத்தை நடமாட்டம்
வால்பாறை, ஆக. 18: வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்குள் இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்படுவதால், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. ÷வால்பாறை வனப் பகுதிகளில் ஏராளமான


வால்பாறை, ஆக. 18: வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்குள் இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்படுவதால், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
÷வால்பாறை வனப் பகுதிகளில் ஏராளமான சிறுத்தைகள் உள்ளன. வனத்தையொட்டியுள்ள எஸ்டேட் பகுதிகளில் வசிப்பவர்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தைகள், தற்போது டவுன் பகுதியில் உலா வரத் துவங்கியுள்ளன.
÷வாழைத்தோட்டம் பகுதிக்குள் வெள்ளிக்கிழமை சிறுத்தை நடமாடுவதை அப் பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இந் நிலையில், வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சிறுத்தை தாக்கி இறந்த நிலையில், கன்றுக் குட்டி கிடந்துள்ளது.
இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள், வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த வனத் துறையினர், சிறுத்தை தாக்கி கன்றுக் குட்டி இறந்தது தொடர்பான தகவல்களை வெளியே தெரிவிக்க வேண்டாம் என அப் பள்ளி ஆசிரியர்களை வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
÷இதுகுறித்து அப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "சிறுத்தைகள் பெரும்பாலும் கால்நடைகளை தாக்கினாலும், சிலசமயங்களில் சிறுவர், சிறுமியரையும் தாக்கும் அபாயம் நிலவுகிறது.
நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயிலும் பள்ளியில் சிறுத்தை நடமாடுவது அவர்களது பாதுகாப்பை கேள்விக்குறியாகியுள்ளது.
சிறுத்தைகள் வனப் பகுதியைவிட்டு வெளியேறாமல் தடுக்க வேண்டியது வனத் துறையினரின் கடமை' என்றனர்'.
பள்ளியின் பின்புறத்தில் பயன்பாடின்றி உள்ள ஆய்வுக் கூடங்கள், வகுப்பறைகளை சுற்றிலும் புதர்மண்டிக் கிடக்கிறது. இந்தப் பகுதியில் வளர்ந்துள்ள செழிப்பான புற்களை மேய்வதற்காக மாடுகள் வருகின்றன. இவற்றை தாக்குவதற்காகத்தான் சிறுத்தைகளும் பின்தொடர்கின்றன.
எனவே, புதர்மண்டிக் கிடக்கும் பகுதியை சுத்தப்படுத்துவதன் மூலம் வனவிலங்குகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தலாம்' என வனத் துறையினர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...