மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பண்பை வளர்க்கும் கல்வி இப்போது இல்லை!

கோவை, பிப்.12: பண்பை வளர்க்கும் கல்வி இப்போது இல்லை என்று முனைவர் தெ.ஞானசுந்தரம் பேசினார்.  கோவை கம்பன் கழகத்தின் 40-ம் ஆண்டு கம்பன் விழாவையொட்டி 'கம்பனில் பேசாதன பேசினால்...' என்ற தலைப்பிலான சுவை அரங

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:08 pm

தெ. ஞானசுந்தரம்

கோவை, பிப்.12: பண்பை வளர்க்கும் கல்வி இப்போது இல்லை என்று முனைவர் தெ.ஞானசுந்தரம் பேசினார்.

 கோவை கம்பன் கழகத்தின் 40-ம் ஆண்டு கம்பன் விழாவையொட்டி 'கம்பனில் பேசாதன பேசினால்...' என்ற தலைப்பிலான சுவை அரங்கம் கோவை மணி மேல்நிலைப் பள்ளி நானி கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 இதில் சுவை அரங்கத்தின் தலைவர் முனைவர் தெ.ஞானசுந்தரம் பேசியது:

 தமிழகம் மட்டுமல்ல இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இப்போது கம்பன் விழா நடைபெறுகிறது. கம்பனின் பெருமை உலகம் முழுவதும் பரவி உள்ளது. மனிதப் பண்புக்கு முதன்மை தந்த நாடு நம் நாடாகும். கல்வி என்பது செல்வத்தை ஈட்டுவதற்கு மட்டுமல்ல. வாழ்க்கையை வளப்படுத்துவதற்கும் தான்.

 ஆசிரியருக்கு மாணவர்கள் மதிப்பு தந்த காலம் போய், இப்போது ஆசிரியரை மாணவரே கொலை செய்யும் சூழ்நிலை வந்துவிட்டது. கணினி துறை அபரிமித வளர்ச்சி அடைந்துவிட்டது. கணினி பற்றி அறிவு போதிக்கப்படும் நேரத்தில், கடவுள் நம்பிக்கை பற்றி கற்பிக்கப்படுவதில்லை. பண்பை வளர்க்கும் கல்வி இப்போது இல்லை. இப்போதுள்ள இளைய தலைமுறையினருக்கு கம்ப ராமாயணத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

 சுவை அரங்கத்தில் கல் என்ற தலைப்பில் புலவர் மு.ராசரத்தினமும், வில் என்ற தலைப்பில் கவிஞர் அரு.நாகப்பனும், பாதுகை என்ற தலைப்பில் மரபின் மைந்தன் முத்தையாவும், அரியணை என்ற தலைப்பில் முனைவர் அ.அறிவுநம்பியும் பேசினர்.

கம்பராமாயண நாட்டிய நாடகம்: அதைத் தொடர்ந்து கிட்கிந்தா காண்டம் என்ற தலைப்பில், கம்பராமாயண நாட்டிய நாடகம் நடைபெற்றது.

பட்டிமண்டபம்: மாலையில் பேராசிரியர் அப்துல் காதர் நடுவராக பங்கேற்ற 'வள்ளுவர் வழியில் கம்பன் குரல் ஓங்கி ஒலிப்பது' என்ற தலைப்பிலான பட்டி மண்டபம் நடைபெற்றது. இதில், பால காண்டத்திலே என்ற தலைப்பில் கவிஞர் அரு.நாகப்பன், கவிஞர் அம்சவேணி பேசினர். அயோத்தியா காண்டத்திலே என்ற தலைப்பில் அ.அறிவுநம்பி, பி.லதா ஆகியோரும், சுந்தர காண்டத்திலே என்ற தலைப்பில் புலவர் மு.ராசரத்தினம், முனைவர் கோ.புவனேஸ்வரி ஆகியோர் பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.