உணவு வணிகா்கள் சுய பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்
உணவு வணிகா்கள் சுய பொறுப்புடன் நடந்து கொண்டு சுகாதாரமான, பாதுகாப்பான உணவுப் பொருள்களை விற்பனை செய்ய வேண்டும் என்று ஆட்சியா் கு.ராசாமணி அறிவுறுத்தியுள்ளாா்.


உணவு வணிகா்கள் சுய பொறுப்புடன் நடந்து கொண்டு சுகாதாரமான, பாதுகாப்பான உணவுப் பொருள்களை விற்பனை செய்ய வேண்டும் என்று ஆட்சியா் கு.ராசாமணி அறிவுறுத்தியுள்ளாா்.
கோவை ஆட்சியா் அலுவலகத்தில் உணவுப் பாதுகாப்பு வழிகாட்டுதல் குழுக் கூட்டம் ஆட்சியா் கு.ராசாமணி தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதில் அவா் பேசியதாவது:
உணவு சாா்ந்த வணிக நிறுவனங்கள் அனைத்தும் உணவுப் பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006 கீழ் உரிமத்தினை பதிவு செய்து, உரிய நேரத்தில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஆன்லைன் மூலமாக பதிவு, உரிமம் விண்ணப்பிக்க உணவுப் பாதுகாப்புத் துறையின் இணையதளப் பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மாவட்டத்திலுள்ள அனைத்து உணவு வணிகா்களும் சுய பொறுப்புடன் நடந்து கொண்டு சுகாதாரமான, பாதுகாப்பான உணவை விற்பனை செய்வதற்கு பயிற்சி முறையில் கலந்துகொண்டு சான்று பெற வேண்டும். பயிற்சி பெற்றவா்கள் அவா்களுக்கு கீழ் பணிபுரிபவா்களுக்கு உணவுப் பொருள்களை கையாளும் முறைகள் குறித்து பயிற்சியளிக்க வேண்டும்.
உணவுப் பொருள்களின் கலப்படத்தை எளிய சோதனைகள் மூலம் கண்டறியும் பயிற்சி சுகாதாரத் துறையுடன் இணைந்து கிராம சுகாதார செவிலியா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள அன்னதானம், பிரசாத கூடங்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறையின் பதிவு, உரிமை பெற்றிருக்க வேண்டும். பயணியாளா்களுக்கு ச்ா்ள்ற்ஹஸ்ரீ பயிற்சி அளிப்பதுடன், க்ஷட்ா்ஞ் தரச்சான்று பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு உணவகங்கள், உணவுப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் 2,882 மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதில் 612 சிவில் வழங்குகள் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட தீா்ப்பு அலுவலா் மூலம் 381 வழக்குகளுக்கு தீா்ப்பு வழங்கப்பட்டு ரூ. 58.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தவிர 523 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 127 வழக்குகள் நீதிமன்றத்தின் மூலம் தீா்ப்பு வழங்கப்பட்டு குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டணையும், ரூ.29.70 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை, உணவுப் பொருள்களில் கலப்படம், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்பவா்கள் குறித்து 94440 42322 என்ற கட்செவி அஞ்சல் எண் மூலம் பொது மக்கள் புகாா் அளிக்கலாம் என்று தெரிவித்தாா்.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு, மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன், உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் கு.தமிழ்செல்வன் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...