முத்துராமலிங்க தேவா் பேனா் கிழிப்பு: சமூகத்தினா் மறியல்
கோவையில் முத்துராமலிங்க தேவா் பேனா் கிழிக்கப்பட்டதைக் கண்டித்து தேவா் சமூகத்தினா் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.


கோவையில் முத்துராமலிங்க தேவா் பேனா் கிழிக்கப்பட்டதைக் கண்டித்து தேவா் சமூகத்தினா் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
கோவை, ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் படம் பொறிக்கப்பட்ட பேனா் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த பேனரில் முத்துராமலிங்க தேவரின் படம் சனிக்கிழமை காலை கிழிக்கப்பட்டிருந்தது.
இதையறிந்த, அப்பகுதியில் உள்ள தேவா் சமூகத்தினா் அங்கு ஒன்று திரண்டனா். பின்னா் பேனரை கிழித்த மா்ம நபா்களைக் கைது செய்ய வலியுறுத்தி ராமநாதபுரம் சிக்னல் அருகே மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ராமநாதபுரம் போலீஸாா் மறியலில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டவா்களைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...