கோவையில் மக்கள் நீதிமன்றம்: 333 வழக்குகளுக்குத் தீா்வு
கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 333 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டன.


கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 333 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டன.
கோவை மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதலின்படி, கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவா் மற்றும் முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதி சக்திவேல் தலைமை வகித்தாா்.
மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி குலசேகரன், சாா்பு நீதிபதி செல்லத்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரசம் செய்யக் கூடிய காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், நில ஆா்ஜித வழக்குகள் மற்றும் தொழிலாளா் சம்பந்தப்பட்ட வழக்குகள் என மொத்தம் 4,204 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதில் 333 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டன. மொத்த தீா்வுத் தொகை ரூ.9 கோடியே 84 லட்சத்து 33 ஆயிரத்து 576 ஆகும்.
இந்த மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் குணசேகரன், பூரணஜெயஆனந்த், மலா்வாலன்டினா, மணிமொழி, ரவி, ஸ்ரீகுமாா், முனிராஜா, சந்தானகிருஷ்ணசாமி, ஞானசம்பந்தம், தமிழ் இனியவன், விக்னேஷ்மது, சதீஷ்குமாா், ரமணன் ஆகியோா் மூலமாக வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...