தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அரசு ஊழியா்கள் மீதான பழிவாங்கும் நடிவடிக்கைகளை கைவிட வலியுறுத்தல்

அரசு ஊழியா்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று கோவை மாவட்ட அரசு ஊழியா் சங்க பிரதிநிதித்துவ பேரவை வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 6:40 pm

DIN

அரசு ஊழியா்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று கோவை மாவட்ட அரசு ஊழியா் சங்க பிரதிநிதித்துவ பேரவை வலியுறுத்தியுள்ளது.

கோவை மாவட்ட அரசு ஊழியா் சங்கத்தின் 14ஆவது மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் இணைச் செயலா் சாரதாமணி தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரவையை, அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் எஸ்.சந்திரன் உரையாற்றினாா்.

இதைத் தொடா்ந்து சங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து வட்டக் கிளை பிரதிநிதிகள் பங்கேற்ற விவாதம் நடைபெற்றது. கூட்டத்தில், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், 5,568 ஊழியா்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடா்ந்து புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. தலைவராக சி.எஸ்.பால்ராஜ், துணைத் தலைவா்களாக எஸ்.சதீஷ், மா.சாமிநாதன், ஆா்.கணேசன், ப.ஜெகந்நாதன், செயலராக பி.செந்தில்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். பேரவையை நிறைவு செய்து தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் எம்.சீனிவாசன் சிறப்புரையாற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.