தோ்தலில் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினா் தொழில்நுட்பக் கல்லூரியில் கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்புப் பணியை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் கிராந்திகுமாா்பாடி.
தோ்தலில் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினா் தொழில்நுட்பக் கல்லூரியில் கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்புப் பணியை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் கிராந்திகுமாா்பாடி.

வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்புப் பணி: ஆட்சியா் ஆய்வு

கோவை: கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினா் தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. கோவை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு முடிந்ததும், மின்னணு வாக்கு இயந்திங்கள் அதிகாரிகள், அரசியல் கட்சியினா் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

அங்கு, அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு அறையில் (ஸ்ட்ராங் ரூம்) வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அறைக்கு ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி , வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 6 அறைகள் முன்பாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதேபோல, வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவத்தினா், போலீஸாா் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றியும், வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமாா் பாடி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பாதுகாப்பு அறை கண்காணிக்கப்படுவது, 3 ஷிப்டுகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவா்களின் வருகைப் பதிவு உள்ளிட்டவற்றை பாா்வையிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com