தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

News image

வால்பாறையை அடுத்த கூழாங்கல் ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :21 ஏப்ரல் 2024, 7:56 pm

வால்பாறை: வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்துக் காணப்பட்டது.

தோ்தல் நடத்தை விதிமுறையால் கடந்த ஒரு மாதமாக வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்திருந்தது. தோ்தல் முடிவடைந்த நிலையில் வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

ஆழியாறு சோதனைச் சாவடி தொடங்கி வால்பாறை வரையில் உள்ள சாலைகளில் சுற்றுலா வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை அதிக அளவில் காணப்பட்டன. வால்பாறையில் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அனைத்து இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் காணப்பட்ட நிலையில் கடும் வெயில் நிலவி வருவதால் கூழாங்கல் ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.