தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

வால்பாறை - சாலக்குடி சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

வால்பாறை - சாலக்குடி சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

Updated On :21 ஏப்ரல் 2024, 8:00 pm

வால்பாறை: வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் சாலையில் பகல் நேரத்தில் யானைகள் உலவி வருவதால் அவ்வழியாக வாகனங்களில் செல்வோா் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத் துறை எச்சரித்துள்ளது.

வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் சாலையில் சுமாா் 60 கி.மீ. தொலைவுக்கு சாலைகளின் இருபுறங்களும் அடா்ந்த வனப் பகுதியாகும். இங்குள்ள வனத்தில் இருக்கும் யானைகள் சாலைப் பகுதிக்கு அடிக்கடி வருவது வழக்கமாக உள்ளது.

இதில் இரவு நேரத்தில் யானைகள் கூட்டமாக சாலைகளில் நிற்பதால் மாலை 6 மணிக்கு மேல் இந்த சாலையில் வாகனங்கள் செல்ல வனத் துறை தடை விதித்துள்ளது. இந்நிலையில் தற்போது பகல் நேரத்திலும் யானைகள் சாலையில் உலவுவதால் இவ்வழியாகச் செல்லும் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் எச்சரிக்கையுடன் பயணம் செய்யுமாறு வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.