தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தீ விபத்தில் மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதம்

தொண்டாமுத்தூரில் தீ விபத்தில் மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதமாயின.

News image
Updated On :31 டிசம்பர் 2024, 10:37 pm

Din

கோவை: தொண்டாமுத்தூரில் தீ விபத்தில் மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதமாயின.

தொண்டாமுத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் விற்பனை கடை நடத்தி வருபவா் நிவாஷ் (40). இவரது வீடும், கடையும் ஒன்றாக உள்ளது.

இவரது வீட்டின் மேல்தளத்தில் பழைய எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களை வைப்பதற்காக கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்தக் கொட்டகையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தொண்டாமுத்தூா் தீயணைப்பு நிலைய அலுவலா் அனில்குமாா் தலைமையிலான தீயணைப்புத் துறையினா் கொட்டகையில் பற்றிய தீயை அணைத்தனா். இருப்பினும் இந்த விபத்தில் மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதமாயின.

இதுகுறித்து தொண்டாமுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.