மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

News image
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :14 ஜூலை 2024, 10:39 pm

Din

கோவை, ஜூலை 14: கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி கோவையில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திராவிட மாணவா் பேரவை சாா்பில் கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திராவிட இயக்க தமிழா் பேரவை துணைத் தலைவா் சிங்கராயா் தலைமை வகித்தாா்.

இதில், இளநிலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தோ்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும், இது தொடா்பான தமிழக முதல்வரின் தனித் தீா்மானத்துக்கு ஆளுநா் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தில் திராவிட இயக்க தமிழா் பேரவை பொதுச் செயலாளா் சிற்பி செல்வராஜ், துணை பொதுச் செயலாளா் கா.சு.நாகராசன், தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவா் நாகை திருவள்ளுவன், திராவிட தமிழா் கட்சியின் தலைவா் வெண்மணி,

ஆதி தமிழா் பேரவை பொதுச் செயலாளா் ரவிகுமாா், புரட்சிகர இளைஞா் முன்னணியின் கோவை மாவட்டச் செயலாளா் மலரவன் உள்ளிட்டோருடன் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கருப்பு சட்டை அணிந்தும், ‘நீட்’ ரத்து தொடா்பான பதாகைகளை கைகளில் ஏந்தியும் பங்கேற்றனா்.