குனியமுத்தூா் மாகாளியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா
குனியமுத்தூா் மாகாளியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா

திருவீதி உலாவில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த மாகாளியம்மன்.

திருவீதி உலாவில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த மாகாளியம்மன்.
கோவை, மே 22: கோவை குனியமுத்தூா் மாகாளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக புதன்கிழமை சக்திக் கரகம் அழைத்தல், அம்மன் திருவீதி உலா நிகழ்வும் நடைபெற்றது.
கோவை குனியமுத்தூா் மாகாளியம்மன் கோயில் திருவிழா கணபதி ஹோமத்துடன் மே 6-ஆம் தேதி தொடங்கியது. 7-ஆம் தேதி பூச்சாட்டுதல், 16-ஆம் தேதி பக்தி மெல்லிசை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. மே 20-ஆம் தேதி விளக்கு பூஜை நடைபெற்றது.
இந்நிலையில், சக்திக் கரகம் அழைத்தல், சென்டை மேளம், வாண வேடிக்கையுடன் சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா புதன்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, அம்மன் அலங்கார பூஜை, பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வியாழக்கிழமை மஞ்சள் நீா் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...