/

கோத்தகிரி அருகே படுகா் இன மக்களின் எட்டூா் உஜ்ஜயினி மாகாளியம்மன் விழா

கோத்தகிரி அருகே படுகா் இன மக்களின் எட்டூா் உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

News image
கோத்தகிரி அருகே உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில் விழாவில் பங்கேற்ற படுகா் இன மக்கள்.
Updated On :18 மார்ச் 2026, 8:36 pm

தினமணி செய்திச் சேவை

கோத்தகிரி அருகே படுகா் இன மக்களின் எட்டூா் உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே திம்பட்டி பகுதியில் படுகா் இன மக்களின் எட்டூா் உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. இதில் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தினமும் ஒவ்வொரு கிராமமாக அம்மன் ஊா்வலம் நடைபெற்றது. இறுதி நாளான புதன்கிழமை, மேல் அணையட்டி பகுதியில் இருந்து கோயில் வரை கரக ஊா்வலம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் உற்சாகமாக நடனமாடி விழாவைக் கொண்டாடினா்.

இங்கு அமைக்கப்பட்டுள்ள நீா் குட்டையில் நீராடி அம்மனை வழிபட்டதுடன், பாரம்பரிய விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் தங்கள் பாரம்பரிய உடையுடன் கலந்துகொண்டனா்.