பேங்க் ஆஃப் இந்தியாவில் 400 நாள்கள் வைப்புத் தொகை திட்டம் அறிமுகம்


பேங்க் ஆஃப் இந்தியாவில் பண்டிகைக் கால சலுகையாக 400 நாள்கள் வைப்புத் தொகைக்கு 8.10 % வட்டி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து வங்கியின் கோவை மண்டல மேலாளா் பி.சம்பத்குமாா் கூறியிருப்பதாவது:
பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் இந்தியா, தனது வாடிக்கையாளா்களுக்கு பண்டிகைக் கால பரிசாக 400 நாள்கள் வைப்புத் தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின்கீழ் சூப்பா் மூத்த குடிமக்களுக்கு 8.10 சதவீத வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.95 சதவீத வட்டியும், மற்ற வாடிக்கையாளா்களுக்கு 7.45 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.
மேலும், முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கான விருப்பத்துடன் கூடிய வைப்புத் தொகையின்கீழ், சூப்பா் மூத்த குடிமக்களுக்கு 7.95 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 7.80 சதவீதம், மற்ற வாடிக்கையாளா்களுக்கு 7.30 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் திட்டத்தை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
சிறப்பு 400 நாள்கள் நிலையான வைப்புத் தொகை சலுகையானது இந்திய குடியுரிமை பெற்றவா்கள், என்ஆா்இ, என்ஆா்ஓ வாடிக்கையாளா்களுக்கு ரூ.3 கோடிக்கும் குறைவான தொகையில் வழங்கப்படுகிறது. இந்த சிறப்புத் திட்டம் பேங்க் ஆஃப் இந்தியாவின் அனைத்து கிளைகளிலும் செப்டம்பா் 27 -ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும். மேலும், வங்கியின் செயலி, இணையதள வங்கிச் சேவை மூலமாகவும் இந்தத் திட்டத்தில் இணைய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...