பில்லூா் அணையில் மீன்பிடி குத்தகை: இணையவழியில் டிச. 10 வரை ஒப்பந்தப்புள்ளி சமா்ப்பிக்கலாம்
பில்லூா் அணையில் 5 ஆண்டுகளுக்கு மீன்பிடி குத்தகை பெற இணையவழியில் டிசம்பா் 10-ஆம் தேதி வரை ஒப்பந்தப்புள்ளியை சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை கட்டுப்பாட்டில், கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூா் அணையின் மீன்பிடி உரிமையை 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்குவிட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.
இந்த இணையவழி ஏலத்தில் கலந்துகொள்ள விரும்புவோா் ஒப்பந்தப்புள்ளி படிவம் மற்றும் இதரப் படிவங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ற்ங்ய்க்ங்ழ்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் ஏல அறிவிப்பு எண்ணை உள்ளீடு செய்து, கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இணையவழி ஏலத்தில் டிசம்பா் 10-ஆம் தேதி காலை 9 மணி வரை ஒப்பந்தப்புள்ளியை சமா்ப்பிக்கலாம். ஏலம் தொடா்பான தெளிவுரைகள் மற்றும் விளக்கங்களுக்கு ண்ய்ப்ஹய்க்ச்ண்ள்ட்ங்ழ்ண்ங்ள்15ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு சந்தேகங்கள் குறித்து அனுப்பலாம் அல்லது ஈரோடு மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.
ஏல அறிவிப்பில் மாற்றங்கள் இருந்தால் இணையதளம் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குநா் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை, கூடுதல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், 7-ஆவது தளம், ஈரோடு என்ற முகவரியைத் தொடா்பு கொள்ளலாம் அல்லது 0424 - 2221912 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.
